விஜய் மட்டும்தான் சிகெரெட் பிடிக்கறாரா?: அன்புமணிக்கு விஜய்சேதுபதி கேள்வி

சிகரெட் பிடிப்பது தொடர்பாக நடிகர்களை ஏன் வம்புக்கு இழுக்கிறீர்கள்; சிகரெட் கம்பெனிக்கு எதிராகத்தானே குரல் கொடுக்க வேண்டும் என நடிகர் விஜய் சேதுபதி கேள்வி எழுப்பியுள்ளார்.

விஜய் நடிப்பில் இயக்குநர் முருகதாஸ் இயக்கி வரும் சர்கார் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த மாதம் வெளியானது. அதில் விஜய் சிகரெட் புகைப்பது போன்ற படம் இடம்பெற்றிருந்தது. இதற்கு பாமக சார்பில் எதிர்ப்பு தெரிவித்து படத்தில் விஜய் புகைப்பிடிக்கும் காட்சிகளை நீக்க வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டது. அக்கட்சியின் இளைஞரணி தலைவரும் நாடாளுமன்ற எம்.பி.யுமான அன்புமணி கடுமையான கண்டனம் தெரிவித்திருந்தார்.

தமிழக அரசும் இந்த விளம்பரத்தை நீக்கும்படி அறிவுறுத்தியது. இதையடுத்து சர்கார் படத்தின் ஃபோஸ்டரை படத்தின் தயாரிப்பு நிறுவனம் அதன் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்திலிருந்து நீக்கியது.

அன்புமணி – “சர்கார்” விஜய் – விஜய்சேதுபதி

இந்நிலையில் இதுகுறித்து நடிகர் விஜய் சேதுபதி கருத்து தெரிவித்துள்ளார். அப்போது அவர்,  “ 1980-களில் திரைப்படங்களில் சிகரெட் பிடிப்பதை மிகைப்படுத்திக் காட்டப்பட்டது போல் தற்போது படமாக்கப்படுவதில்லை. என் அப்பா சிகரெட் பிடிப்பார். அவரை பார்த்து நான் கற்றுக் கொள்ளவில்லை. படங்களில் அஜீத் சிகரெட் பிடிப்பதை பார்த்தும் நான் புகைப் பிடிக்கவில்லை.

ஆனால் எனக்கும் புகைப் பிடிக்கும் பழக்கம் இருக்கிறது. நடிகர் விஜய் மட்டும்தான் படங்களில் சிகரெட் பிடிக்கிறாரா?, மற்ற நடிகர்கள் சிகரெட் பிடிப்பதில்லையா?

சிகரெட் காட்சிக்கு கு எதிர்ப்பு தெரிவிப்பதன் மூலம் அனைவரும் பப்ளிசிட்டி தேடிக் கொள்கின்றனர். சிகரெட் பிடிப்பது உடல் நலத்திற்கு கேடு என்று நம் அனைவருக்கும் தெரியும். இந்த பிரச்னையை முடிவுக்கு கொண்டு வர நினைப்பவர்கள் சிகரெட் கம்பெனிக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும் என்று விஜய்சேதுபதி தெரிவித்தார். .

Leave a Reply

Your email address will not be published.