அஜய்ஞானமுத்து இயக்கத்தில் “விக்ரம் 58” படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மூன்று மொழிகளில் உருவாகி வருகிறது..

இந்த படத்தில் நாயகியாக ஸ்ரீநிதி ஷெட்டி, கிரிக்கெட் வீரர் இர்பான் பதான், இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார் உள்பட பலர் நடித்து வருகின்றனர். படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.

2020 ஆங்கில புத்தாண்டு அன்று (ஜனவரி 1) இந்த படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக் வெளியிடப்படும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது. இருப்பினும் “விக்ரமின் 58” படத்தின் தலைப்பு “கோப்ரா” என்று சமூக வலைதளங்களில் ஒரு செய்தி வைரலாகி வருகிறது. ஏற்கனவே இந்த படத்திற்கு “அமீர்” என்று படடைட்டில் வைக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. அப்போது அதை படக்குழு மறுத்தது. தற்போது “கோப்ரா” என்ற பெயர் வைரலாகி வருகிறது.

இந்நிலையில் இன்று மாலை ஆறு மணிக்கு டைட்டில் லுக் வெளியிடப்படும் என கூறியுள்ளனர்