குஜராத்தில் புதுமைக் கண்டுபிடிப்பு நிகழ்த்தியவர்களுக்கான விருது வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு உரையாற்றிய இந்திய விண்வெளி பயன்பாட்டு மையத் தலைவர் தபன் மிஷ்ரா, “இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமும் (ஐ.எஸ்.ஆர்.வோ ) ஏழை மக்களின் துயர் துடைக்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றது. ஆனால் மக்களின் பொதுப்புத்தியில், நாங்கள் மார்ஸ்-க்கு செயற்கைக்கோள் செலுத்தும் வேலையில் மட்டுமே ஈடுப்பட்டு வருகின்றோம் என்கிறக் கருத்து ஆழப் பதிந்துள்ளது. அந்தச் சாதனையை நிகழ்த்தினால் மட்டுமே அங்கீகரிக்கின்றனர். ஆனால், எங்களின் செயற்கைகோளகளின் மூலம் நாங்கள் வழங்கும் தகவல் அரசுக்கு பலவகைகளில் வழிகாட்டுபவையாகவுள்ளன” என்றார்.
நாங்கள் எங்கள் செயற்கோள் மூலம், அடுத்தடுத்த ஆண்டுகளில், எவ்வளவு கரும்பு, தக்காளி வெங்காயம் உற்பத்தி பாதிக்கப்படும் என்பதை முன்கூட்டியே தெரிவித்துவிடுவதால், அரசு, உரிய நேரத்தில்,நடவடிக்கை எடுத்து விலையைக் கட்டுக்குள் வைக்க முடிகின்றது.
உதாரணத்திற்கு, உத்தரப்பிரதேசம் மற்றும் மகாராஸ்திராவில் கரும்பு உற்பத்தி எவ்வளவு பாதிக்கப்படும் என்பதை நாங்கள் கணித்து சொல்லிவிடுவதால்,  முன்கூட்டியே மத்திய அரசு  பிரேசில் போன்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்க ஏதுவாக அமைகின்றது.  இதனால் தான் கடந்த 10 ஆண்டுகளில், சர்க்கரை விலை ₹ 20-40 க்குள் கட்டுப்படுத்தப் பட்டு உள்ளது என்றார்.
இவ்வாறு  காய்கறி விலையுயர்வை கட்டுக்குள் வைக்கவும் நாங்கள் அரசுக்கு உதவுகின்றோம்.
மேலும் நாங்கள் அனுப்பியுள்ள தகவல் தொழிற்நுட்பச் செயற்கைக் கோள் மூலம் தான் மக்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்த்து சிரிக்கவும், சீரியல் பார்த்து அழவும் முடிகின்றது.
எங்களுக்கு உள்ள குறைந்தப்பட்ச நிதிஒதுக்கீட்டை வைத்துக் கொண்டு நாங்கள் புதுமைகளைக் கண்டுபிடித்து வருகின்றோம்.
ஜெர்மனியில் இருந்து 12 கோடிக்கு வாங்க வேண்டிய ஒரு சி.என்.சி. லேத் கருவியை 1.5 கோடியில் இந்தியாவிலேயே தயாரித்து உள்ளோம்.
எனினும் எங்களுக்கு உரிய அங்கிகாரம் கிடைக்கப்பெருவதில்லை என அவர் வருத்தத்துடன் குறிப்பிட்டார்.
ISRO
 
இந்நிகழ்ச்சியில், 14 புதிய கண்டுபிடிப்புகளுக்கு விருது வழங்கப் பட்டது.