சீன அரசின் சிறந்த வெளிநாட்டு ஆசிரியருக்கான விருதை வென்ற தமிழர்!

சீனாவில் 2018ம் ஆண்டின் சிறந்த வெளிநாட்டு ஆசிரியருக்கான விருதை தமிழகத்தி சேர்ந்த கணித ஆசிரியர் பெற்றுள்ளார். சீன அரசுப்பள்ளியில் ஆசிரியராக பணிப்புரியும் ஐசக் தேவகுமார் 2வது முறையாக இந்த விருதை வென்றுள்ளார்.

isaac

ஈரோடு மாவட்டம் கிருஷ்ணாம் பாளையத்தை சேர்ந்தவர் ஐசக் தேவகுமார். கணித ஆசிரியரான இவர் 2015-ம் ஆண்டு முதல் சீனாவில் உள்ள அரசு பள்ளியில் முதுநிலை கணித ஆசிரியராக பணியாற்றி வருகிறார். தற்போது ஐசக் தேவகுமார் 2018ம் ஆண்டின் சிறந்த வெளிநாட்டு ஆசிரியருக்கான சீன அரசின் விருதை பெற்றுள்ளார்.

மாணவர்களுக்கு எளிமையாகவும், விரைவாகவும் கணிதத்தை கற்பிப்பதில் சிறந்து விளங்கியதற்காக
இந்த விருதை ஐசக் வென்றார். விருதை பெற்ற ஐசக் “எனக்கு இந்த கற்பிக்கும் திறனை வழங்கிய இந்தியாவுக்கு நன்றி” என்று கூறியுள்ளார்.

இதற்கு முன்னதாக 2016ம் ஆண்டு வழங்கப்பட்ட சிறந்த வெளிநாட்டு ஆசிரியருக்கான விருதை இசக் பெற்றுள்ளார்.