ஈஷா ஆதி யோகி சிவராத்திரி கொள்ளை..!

நெட்டிசன்:

கதிரவன் ரவிகுமார் பதிவு

கங்கா 50,000 ரூபாய்..,
யமுனா 20,000 ரூபாய்..,
நர்மதா 5,000 ரூபாய்..,
கோதாவரி 1,000 ரூபாய்,
கடைசியாக,
காவிரி 500 ரூபாய்..

இதெல்லாம் சிவராத்திரி ஈஷா யோகா விழாவிற்கான.,
அந்த அந்த காலரிக்கான பெயரும் அதன் இருக்கை கட்டணமும் தான்..

இதுல கூட காவிரி கேவலமாகி கடைசில..

’50,000 ரூபாய்க்கும் 500 ரூபாய்க்கும் என்ன வித்தியாசம் தெரியுமா, ’’50,000 ரூபாய்க்கு ஆதியோகிக்கு அருகில் உட்கார்ந்து பார்க்கலாம், 20,000 ரூபாய் கொடுத்தால் கொஞ்சம் பின்னால்.
10,000 ரூபாய்க்கு அதற்கும் பின்னால்.
5,000 ரூபாய் கொடுத்தால் எல்.சி.டி. ஸ்க்ரீனுக்கு முன்னால்..,
500 கொடுத்தால், தூரத்தில் இருந்து பார்க்கலாம்..,
அப்போ அந்த இலவச அனுமதி ?! அதையும் தாண்டி தடுப்பு கட்டைகளுக்கு பின்னே, தரையில் உட்காந்து பார்க்கலாம், கேட்கலாம்.. இப்படி அங்கே சிவன் விலைக்கு கிடைப்பார் என சென்ற மக்கள்தான் முதலில் திருந்த வேண்டும்..

பக்தியை விலைக்கு விற்ற கார்ப்பரேட் சாமி !!

Gst.. income tax… sales tax எதுவுமில்லாத. அருமையான தொழில்.. பன்னுனா இந்த மாதிரி தொழில்தான் பன்னனும்னு பலபேர் கெளம்பீட்டா… மக்களோட நெலம…?!

2 thoughts on “ஈஷா ஆதி யோகி சிவராத்திரி கொள்ளை..!

  1. உங்களின் இந்த அவதூறு பரப்பும் முயற்சி,உங்களின் கீழ்தர மனதை காட்டுகிறது. ஈஷாவை வைத்து காசு பண்ணும் அற்ப நோக்கம்

  2. Pl don’t spread false news. All the people who attended including free tickets were seated on chairs. Every body who came ( in lakhs) was given free food (Annadhanam).

Comments are closed.