ஜக்கியின் ஈஷா மையம் அருகில் யானை தாக்கி இளைஞர் பலி !

கோயம்பத்தூர்

கோவை அருகில் உள்ள ஈஷா மையத்தின் ஊழியர் ஒருவர் யானை தாக்கி மரணம் அடைந்துள்ளார்.

ஈஷா யோகா மையம் கோவை அருகில் உள்ளது.  இதன் நிறுவனத் தலைவர் ஜக்கி வாசுதேவ்.  இவர் ஒரு யோகா பயிற்சியாளர்.    நதிகளை இணைக்க சென்னையில் பிரம்மாண்ட கூட்டம் ஒன்றை இன்று ஜக்கி வாசுதேவ் நடத்துகிறார்.

வனத்தை அழித்து ஈஷா யோகா மையம் அமைக்கப்பட்டுள்ளதாக பெருமளவில் புகார் எழுந்துள்ளது தெரிந்ததே.   மரங்களை அழித்து மழை பெய்யாமல் செய்து விட்டு இப்போது நதிகள் இணைப்புப் பற்றி ஜக்கி வாசுதேவ் குரல் எழுப்புவது இணையங்களில் கடும் விமரிசனங்களுக்கு உள்ளாகி வருகிறது.   அது தவிர இந்தப் பகுதியில் உள்ள மக்களை யானைகள் தாக்குவது அடிக்கடி நிகழ்ந்து வருவதாகவும் செய்திகள் வந்த வண்ணம் உள்ளது.

ஈஷா யோகா மையத்தில் ஐ டி சிஸ்டம் அட்மினாக வடமாநில இளைஞர் மனீஷ்குமார் பணி புரிந்து வந்தார்.  நேற்று யானை தாக்கியதில் மனீஷ் குமார் சம்பவ இடத்திலேயே பரிதாப மரணம் அடைந்துள்ளார்.   அவருடைய மரணம் நேற்று அங்கு நிகழ்ந்துள்ள நிலையில் ஜக்கி வாசுதேவ் இன்று சென்னையில் நதிகள் இணப்பு பொதுக்கூட்டம் நிகழ்த்துவது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்து உள்ளது.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Isha yoga centre IT system admin expired because of elephant attack
-=-