என்னை அணியில் இருந்து விலக்காமல் காப்பாற்றிய தோனி. : இஷாந்த் சர்மா

மும்பை

ன்னை அணியில் இருந்து விலக்காமல் பலமுறை தோனிகாப்பாற்றி உள்ளதாக பிரபல கிரிக்கெட் வீரர் இஷாந்த் சர்மா தெரிவித்துள்ளர்.

இந்திய அணியின் பிரபல வேகபந்து வீச்சாளரான இஷாந்த் சர்மா கடந்த 2007 முதல் கிரிக்கெட் விரராக புகழ் பெற்று வருகிறார். பல சர்வதேச போட்டிகளில் இஷாந்த் கலந்துக் கொண்டுள்ளார். நேற்று இவர் செய்தியாளர்களிடம் பேசுகையில் தனது கிரிக்கெட் அனுபவங்கள் குறித்தும் முன்னாள் இந்திய அணித் தலைவர் மகேந்திர சிங் தோனி தமக்கு செய்துள்ள உதவிகள் குறித்தும் தெரிவித்தார்.

இஷாந்த் சர்மா,  ”நான் ஆரம்ப காலத்தில் மிகவும் வேகமாக பந்து வீசி வந்தேன். ஆனால் தற்போது அதை குறைத்து விக்கட்டுகளை வீழ்த்துவதில் கவனம் செலுத்துகிறேன். நமது நோக்கம் விக்கட் வீழ்த்துவதாக மாறி உள்ளது. இவ்வாறு நமது நோக்கம் மாறியது எங்கிருந்து வந்தது என்பது எனக்கு தெரியவில்லை. நான் உலகக் கோப்பை குழுவில் இடம் பெற வேண்டு உள்ளதால் இப்போதைய நிலையில் நானும் இதையே கவனம் செலுத்தி வருகிறேன்.

இது வரை நான் யாரிடமும் நான் எங்கு தவறு செய்கிறேன் என்பதை குறித்து பேசியதில்லை. என்னை பொறுத்தவரை நம் நாடு எனக்கு நிறைய உதவி உள்ளது. நான் 16 நாட்களில்  நான்கு போட்டிகளில் கலந்துக் கொண்டு 30 ஓவர்கள் பந்து வீசி உள்ளேன். . பல சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் எனக்கு உதவி உள்ளனர்.

இந்திய அணியின் முன்னாள் தலைவரான மகேந்திர சிங் தோனி என்னை பலமுறை அணியில் இருந்து விலக்கப்படாமல் காப்பாற்றி உள்ளார். அவர் எனக்கு பக்க பலமாக பலமுறை இருந்துள்ளார். தற்போது விராட் கோலி நான் ஒரு மூத்த வீரர் என்பதால் களைப்படைந்திருக்கலாம். ஆனால் அணிக்கு எனது சேவை மிகவும் தேவைப்படுகிறது என ஊக்கம் அளித்துள்ளார்.” என கூறி உள்ளார்.