புதுடெல்லி: பந்தில் எச்சில் தடவாமல் வீச வேண்டுமெனில், பந்துவீச்சாளர்களுக்கு சிறப்பு பயிற்சி வேண்டும் என்றுள்ளார் இந்திய வேகப்பந்து நட்சத்திரம் இஷாந்த் ஷர்மா.

தற்போதைய கொரோனா வைரஸ் அச்சத்தால், சிவப்புப் பந்தை பளபளப்பாக்க, எச்சில் பயன்படுத்துவதற்கு தடைவிதிக்கப்பட்டது.  இதுகுறித்து பலரும் பலவிதமான கருத்தை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், இஷாந்த் ஷர்மா பேசியுள்ளதாவது, “பந்தைப் பளபளப்பாக்குவதற்கு எச்சில் பயன்படுத்தாத வழக்கத்தைக் கொண்டுவர பந்துவீச்சாளர்களுக்கு கடின முயற்சி தேவை.

தொடக்க காலம் முதல் இவ்வாறாக பழகியதால், அதைத் தவிர்ப்பதற்கு நமக்கு சிறப்பு பயிற்சிகள் தேவைப்படும். டெஸ்ட்டில் பயன்படுத்தும் சிகப்பு நிறப் பந்தை எச்சில் பயன்படுத்தி பளபளப்பாக்கவில்லை என்றால், பந்தை ஸ்விங் செய்ய முடியாது.

இதனால், பேட்ஸ்மென்களுக்கு சாதகமாக போய்விடும். எனவே, இப்படியான சமமற்ற நிலையைத் தவிர்க்க வேண்டுமெனில், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஏதேனும் செய்தாக வேண்டும்” என்றுள்ளார் இஷாந்த்.