ஐஸ்வர்யா ராய் மற்றும் ஆராத்யா மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினர்….!

பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன்(வயது 77) அவரின் மகன் அபிஷேக் பச்சன் (வயது 44) இருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு இருவரும் மும்பையில் உள்ள நானாவதி மருத்துவமனையில் கிசிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அதன்பின் ஐஸ்வர்யா ராய் பச்சன் மற்றும் அவரின் மகள் ஆராத்யாவுக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது தெரிய வந்துது. மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர்

இந்த நிலையில் ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது மகள் ஆராத்யா ஆகிய இருவர் கொரோனா தொற்று நோயிலிருந்து முழுமையாக குணமடைந்து விட்டனர். இதனை அடுத்து அவர்கள் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.