உலகின் சிறந்த உளவுத்துறை ஐஎஸ்ஐ : இம்ரான்கான் புகழாரம்

ஸ்லாமாபாத்

பாகிஸ்தான் உளவுத்துறையான ஐஎஸ்ஐ யை அந்நாட்டு பிரதமர் இம்ரான்கான் பாராட்டி உள்ளார்.

பாகிஸ்தான் நாட்டின் உளவுத்துறையான இண்டர் சர்வீஸஸ் இண்டலிஜென்ஸ் என்பது சுருக்கமாக ஐ எஸ் ஐ என அழைக்கப்படுகிறது.   இந்த உளவுத்துறை நிறுவனம் எல்லை தாண்டிய பயங்கர வாதத்தை ஊக்குவிப்பதாக இந்தியா உள்ளிட்ட உலகின் பல நாடுகள் குற்றம் சாட்டி வருகின்றன.

தற்போது  புதிய பாகிஸ்தான் பிரதமராக பதவி ஏற்றுள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான் ஐ எஸ் ஐ தலைமை செயலகத்தை பார்வை இட்டார்.   இவர் இந்த தலைமை செயலகத்துக்கு வருவது இதுவே முதல் முறை ஆகும்.   தனது அமைச்சர்களுடன் அங்கு வந்த இம்ரான் கானுக்கு அந்த துரை அதிகாரிகள் வரவேற்பு அளித்தனர்.  அத்துடன் தங்களது பல்வேறு பாதுகாப்பு திட்டங்களை விளக்கி உள்ளனர்.

அப்போது இம்ரான் கான், “பாகிஸ்தான் நாட்டு பதுகாப்புக்கு ஐ எஸ் ஐ மிகவும் சேவை செய்து வருகிறது.   நமது நாட்டுக்கு முதல் வரிசை பாதுகாப்பை அளிப்பது ஐஎஸ்ஐ ஆகும்.   உலகிலேயே சிறந்த ஒரு உளவுத்துறை ஐ எஸ் ஐ தான்.” என பலவாறு பாராட்டி புகழரம் சூட்டி உள்ளார்.

கார்ட்டூன் கேலரி