Random image

‘‘பாகிஸ்தான் உளவு அமைப்புக்கு பிடித்த பிரதமர் மோடி’’…..முன்னாள் உளவுத் துறை அதிகாரி

டில்லி:
ஒரு கட்டுரை வெளியிட்டுள்ளது. அதில், இந்தியா&பாகிஸ்தான் இடையிலான பிரச்னைகளை இரு நாடுகளின் உளவுப் பிரிவின் முன்னாள் அதிகாரிகள் 2 பேர் தான் முடிவு செய்வதாக தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ முன்னாள் தலைவர் ஆசாத் துர்ரானி, இந்திய உளவு அமைப்பான ரா அமைப்பின் முன்னாள் தலைவர் துலத் ஆகியோர் இணைந்து ஸ்பை க்ரானிக்கல்ஸ் என்ற புத்தகத்தை வெளியிட்டுள்ளனர். அதில் பல முக்கிய பிரச்னைகளுக்கான தீர்வு குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. காஷ்மீர், கார்கில் விவகாரம், பின்லேடனை அமெரிக்கா கொன்றது, ஜாதவ் கைது, ஹபிஸ் சயித், புர்கான் வானி உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது.

இது குறித்து துர்ராணி அதில் குறிப்பிடுகையில், ‘‘இந்தியா&பாகிஸ்தான் இடையிலான எல்லை பதற்றத்தை இரு நாடுகளும் கைவிட வேண்டும். சுல்பிகர் அலி பூட்டோவின் கருத்துக்களை ஏற்க வேண்டும். காஷ்மீர் பிரச்னைக்கு நேரடி தீர்வு கிடைக்காது. அதனால் நேரடியாக இல்லாத வகையில் தீர்வு காண வேண்டும்.

பேருந்து, வர்த்தகம் போன்றவற்றை தொடங்குவதன் மூலம் இதற்கு முயற்சி செய்ய வேண்டும். பூட்டோ கூறும் ஆலோசனை நல்ல விஷயம். இத்தனை நாட்கள் இதை எப்படி தவறவிட்டோம் என்பது தான் தெரியவில்லை. ஒன்று அதை கையில் எடுக்க வேண்டும். இல்லை என்றால் விட்டுவிட வேண்டும். ‘என்ன கிடைக்கிறதோ அதை எடுத்துக் கொள்ளுங்கள்’ என்ற பூட்டோவின் கோட்பாடு தான் சரியானதாக இருக்கும்’’ என்று தெரிவித்துள்ளார்.

மேலும், அந்த புத்தகத்தில் துர்ராணி குறிப்பிடுகையில்,‘‘ ஐஎஸ்ஐ அமைப்பிற்கு ஏற்ற இந்திய பிரதமர் நரேந்திர மோடி தான். அவர் கடினமான நபர். அவரால் தான் கடினமான முடிவுகளை எடுக்க முடியும். மோடியின் தேர்தலை பாகிஸ்தானுக்கு ஏற்ற பிரதமர் என்ற கண்ணோட்டத்திலேயே ஐஎஸ்ஐ பார்க்கிறது.

மோடியின் கடினமான நடவடிக்கைகள் இந்தியாவை அழிக்கும். அது பாகிஸ்தானுக்கு நன்மையாக அமையும். இந்தியாவின் நலனை மோடி பார்த்துக் கொள்வார். இந்தியாவின் இமேஜை அவர் அழித்து, உள்ளாட்டு சம நிலையையும் அழித்துவிடுவார். அவரது விசித்திர நடவடிக்கைகளால் நான் ஈர்க்கப்படவில்லை.

திடீரென நவாஸ் ஷெரிப் பேத்தி திருமணத்திற்கு மோடி வந்தார். இந்த நாடகம் மக்களுக்கு குழப்பத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. வாஜ்பாயின் அணுகுமுறை சிறந்ததாக இருந்தது. பாஜக ஆட்சிக்கு வந்தால் பாகிஸ்தான் கவலை அடைய வேண்டியதில்லை என்று 1998ம் ஆண்டு இந்திய நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பே நான் குறிப்பிட்டிருந்தேன்.

அவர்கள் நமக்கு நல்லது தான் செய்வார்கள் என்றேன். அடுத்த சில வாரங்களில் கோவையில் அத்வானி வருகையின் போது குண்டு வெடித்தது. வாஜ்பாய் அரசு ஒரு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அதாவது ஒரு இஸ்லாமிய பித்தர் இந்தியாவில் ஆட்சியில் இருப்பதால் நமக்கு கெட்ட விஷயம் கிடையாது என்று அப்போதே குறிப்பிட்டேன்’’ என்று தெரிவித்துள்ளார்.