டிரம்ப் ஒரு ‘முட்டாள்’: ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகள் அறிவிப்பு

லக நாடுகளை பயமுறுத்தி வரும் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகள் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பை முட்டாள் என்று கூறி உளளனர்.

அமெரிக்க புதிய அதிபராக டிரம்ப் பதவி ஏற்றதை தொடர்ந்து பல அதிரடி நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக குறிப்பிட்ட இஸ்லாமிய நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்க வர தடை விதித்து உள்ளார்.

இந்த நிலையில் ஐஎஸ் பயங்கரவாதிகள் முதன்முதலாக டிரம்ப் குறித்து ஆடியோ வெளியிட்டு உள்ளனர்.

நேற்று (செவ்வாய்க்கிழமை) வெளியான அந்த ஆடியோவில் அமெரிக்க அதிபர் டிரம்பை முட்டாள் என்று ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகள் அறிவித்து உள்ளனர். மேலும், அதில் இஸ்லாம் பற்றி எதுவும் தெரியாது என்றும் அரபிக் குறித்த விளக்கமும் தெரியாது. அவர் ஒரு முட்டாள் என்று கூறியுள்ளது.

36 நிமிடம் ஓடக்கூடிய அந்த ஆடியோவை ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகளின் செய்தி தொடர்பாள் அபுஹசன் அல்முகாஜிர் வெளியிட்டுள்ளார்.

அதில்,  டிரம்ப்  முதல் முறையாக ஆட்சிக்கு வந்த பின்னர் பயங்கரவாத குழு குறித்து பேசி வருகிறார்.  ஈராக் மற்றும் சிரியாவின் சில பகுதிகளை கட்டுப்பாட்டின்கீழ் இருப்பதாக அமெரிக்க தலைமையிலான ஐக்கிய கூட்டணி படைகள் இலக்கு நிர்ணயித்து தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது என்று கூறி உள்ளனர்.

மேலுரம், அமெரிக்கா விரைவில் திவாலாகும் என்றும், மற்றவர்களிடம் இருந்து அமெரிக்கா விலகும் அறிகுறிகள் தெளிவாக தெரிவதாகவும் அதில் பேசியுள்ளனர்.

டிரம்ப் தொடர்ந்து இஸ்லாமியருக்கு எதிரான போர் செய்யும் தனது வெறுப்பை வெளிப்படுத்தி வருகிறார் என்றும் டிரம்ப்புக்கு ஷாம் மற்றும் ஈராக் குறித்து எதுவும் தெரியாது, இஸ்லாம் குறித்தும் தெரியாத அவர் ஒரு முட்டாள் என்று கூறியுள்ளது.

ஏற்கனவே இருந்த செய்தி தொடர்பாளர் அபுமுகது அல்அதானி கடந்த ஆண்டு சீரியா மீது நடைபெற்ற வான்வெளி தாக்குதலில் பலியானதை தொடர்ந்து அபுஹசன் தற்போதைய செய்தி தொடர்பாளராக இருக்கிறார். இவர்தான் ஐஎஸ் பயங்கரவாதிகளின்  ஆடியோவை நேற்று வெளியிட்டார்.

Leave a Reply

Your email address will not be published.