பாக்தாத்:

ஈராக்கில் இருந்து ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பை வெளியேற்றும் 3 வருட போர் முடிவுக்கு வந்துள்ளது என்று அந்நாட்டு பிரதமர் ஹைதர் அல் அபெடி அறிவித்துள்ளார்.

ஈராக் நாட்டில் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு மக்களுக்கு எதிரான வன்முறையில் ஈடுபட்டு வந்தது. அவர்களை நாட்டில் இருந்து வெளியேற்றும் முயற்சியில் ஈராக் ராணுவம் ஈடுபட்டது.

பாக்தாத் நகரில் இன்று பிரதமர் அபெடி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில்,‘‘ ஈராக் மற்றும் சிரிய எல்லையை எங்களது படைகள் முழு கட்டுக்குள் கொண்டு வந்துள்ளன. அதனால் ஐ.எஸ். அமைப்பினருக்கு எதிரான போர் முடிவுக்கு வந்துள்ளது.

எங்களது வளர்ச்சியை அழிக்க எதிரிகள் விரும்பினர். ஆனால் ஒற்றுமை மற்றும் தீர்மானத்துடன் செயல்பட்டு வெற்றி பெற்றுள்ளோம். குறைந்த காலத்தில் வென்றுள்ளோம்’’ என்றார்.