இஸ்லாமாபாத்:

அமைதிக்கான ஆய்வுகளை மேற்கொள்ளும் பாகிஸ்தான் நிறுவனம் (பிஐபிஎஸ்) தனது ஆய்வு அறிக்கையை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. கடந்த வருடம் நடைபெற்ற சம்பவங்களின் உள்ளீட்டு தகவல்களை ஆய்வு செய்து வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில், ‘‘ பாகிஸ்தானில் ஐ.எஸ் பயங்கரவாத இயக்கம் மிகப்பெரிய அச்சுறுத்தலாக வளர்ந்துள்ளது. இங்கு பயங்கரவாதிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் சமீபத்தில் நடத்தப்படும் பயங்கரவாத தாக்குதல்களுக்கு ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்று வருகிறது.

இந்த அமைப்பின் செயல்பாடு சிந்த் மற்றும் பலுசிஸ்தான் மாகாணத்தில் காணப்படுகிறது. கடந்தாண்டு இரு சீனர்கள் கடத்தப்பட்டு கொல்லப்பட்ட விவகாரத்தில் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் செயல்பாடு இருந்துள்ளது. பிஐபிஎஸ் அறிக்கையை வெளியிட்டு உள்ளது. பாகிஸ்தானுக்கு எழுந்து உள்ள பாகிஸ்தான் சவால்களை பட்டியலிட்டு உள்ளது.

தெரிக்- இ -தலிபான் பாகிஸ்தான், ஜமாதுல் அக்ரார் மற்றும் இதே நோக்கம் கொண்ட இயக்கங்கள் 58 சதவித தாக்குதலை நடத்தி உள்ளன. பிற 37 மற்றும் 5 சதவித தாக்குதல்கள் முறையே தேசியவாத கிளர்ச்சியாளர்கள் மற்றும் வன்முறைக் குழுக்களால் நடத்தப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தின் செயல்பாடு கடந்தாண்டு அதிகரித்துள்ளது. வடக்கு சிந்து மற்றும் பலுசிஸ்தான் மாகாணங்களில் இந்த பயங்கரவாத இயக்கங்களால் தாக்குதல் நடந்துள்ளது. ஐ.எஸ். கால் பதிப்பு அதிகரித்து உள்ளது. 6 பயங்கர தாக்குதல்களில் 153 பேரை கொல்லப்பட்டுள்ளனர்.

பாகிஸ்தானில் கடந்த 2017-ம் ஆண்டில் பயங்கரவாத தாக்குதல் அதற்கு முந்தைய ஆண்டை விட 16 சதவிதம் குறைந்துள்ளது. கடந்த ஆண்டு மட்டும் 370 பயங்கரவாத தாக்குதல்கள் நடந்துள்ளது, இதில் 815 பேர் பலியாகி உள்ளனர். 1,736 பேர் காயமடைந்துள்ளனர்.

பாகிஸ்தான் ராணுவம் 524 பயங்கரவாதிகளை கொன்றுள்ளது. சிரியா மற்றும் ஈராக்கில் உலக நாடுகள் படையுடன் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம் அழிவை சந்தித்து வருகிறது. ஆனால், பாகிஸ்தானில் இதன் செயல்பாடு அதிகரித்துள்ளது தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானில் செயல்படும் தலிபான் மற்றும் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கங்கள் இடையே மோதலும் நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.