கண்ணூர்,

லகை அச்சுறுத்தி வரும ஐ.எஸ். பயங்கரவாதிகளுடன் தொடர்பில் இருந்ததாக  3 கேரள வாலிபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கேரளா இஸ்லாமிய இளைஞர்கள் பலர் ஐஎஸ் அமைப்பில் சேர்ந்திருப்பதாக அவ்வப்போது செய்திகள் வந்துள்ள நிலையில் தற்போது 3 இளைஞர்கள் கைது செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே ஐஎஸ் அமைப்பில் சேர தனது மகனை  ஜாகிர் நாய்க் தலைமையிலான இஸ்லாம் ஆராய்ச்சி அறக்கட்டளை (ஐஆர்எப்) கவுரவு உறவு மேலாளாராக இருப்பவர் ஆர்ஷி குரெஷி  கட்டாயப்படுத்தினார் என்று அந்த அமைப்பில் சேர்ந்த கேரளா வாலிபரின் தாய் வாக்குமூலம் அளித்திருந்தார்.

கேரள மாநிலம் கோழிக்கோடு, கண்ணூர் போன்ற பகுதிகளைச் சேர்ந்த ஆண்களும், பெண்களும் சுமார் 20 பேர் திடீரென்று மாயமானார்கள். பின்னர் சில நாட்கள் எந்தவித தொடர்பும் இல்லாத நிலையில் பின்னர் மீண்டும் அவர்களுக்குள்  தகவல்கள் மட்டும் பரிமாறப்பட்டன.

அதை கண்காணித்த தேசிய புலனாய்வு அமைப்பு அவர்களை அதிரடியாக கைது செய்து வருகிறது. இந்நிலையில், .  கண்ணூர் மாவட்டத்தில் இருந்து மாயமாகி இருந்த அப்துல் ரசாக் (வயது 26), ரஷீத் (25), மிதிலாஜ் (24) ஆகியோர் தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பினர் விசாரணை நடத்தியபோது, அவர்கள் சிரியாவில் உள்ள ஐ.எஸ். தீவிரவாத அமைப்புடன் இணைந்திருப்பது உறுதியானது.

இவர்கள் சில நாட்களுக்கு முன்பு சொந்த ஊர் திருப்பியதை அறிந்த தேசிய புலனாய்வு அமைப்பினர் அவர்களை கண்காணிக்கத் தொடங்கினார். அதையடுத்து  கண்ணூர் முண்டரை என்ற இடத்தில் வைத்து அப்துல் ரசாக், ரஷீத், மிதிலாஜ் ஆகிய 3 பேரையும் அதிரடியாக கைது  செய்தனர்.

அவர்களை ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இது கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.