பெய்ஜிங்:

மேற்கு சீன பகுதியின் சிஞ்ஜியாங் மண்டலம் உய்குர் தன்னாட்சி பகுதியை சேர்ந்த பெரும்பாலான முஸ்லிம் மக்கள் சட்டவிரோதமாக தென்கிழக்கு ஆசியா, துருக்கி வழியாக சென்று சிரியா மற்றும் ஈராக்கில் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக போராடி வருவது சீனாவுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய கிழக்கு பகுதியில் உய்குர் முஸ்லிம்கள் போரிடுவதற்கு சீனா கவலை தெரிவித்ததற்கு பதிலடியாக கடந்த 2015ம் ஆண்டு சீன பிணையக் கைதியை ஐஎஸ்ஐஎஸ் கொலை செய்தது. கடந்த சில ஆண்டுகளாக உய்குர் மற்றும் ஹென் சீனர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக சிஞ்ஜியாங்கில் நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டு, அங்கு அமைதியற்ற சூழல் நிலவி வருகிறது. இதற்கு ஐஎஸ்ஐஎஸ் தான் காரணம் என்றுசீனா பழி சுமத்தி வருகிறது.

இந்நிலையில் ஈராக்கில் உள்ள ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் சமீபத்தில் அரை மணி நேரம் கொண்ட ஒரு வீடியோ பதிவை வெளியிடடுள்ளனர். அதில் உய்குர்கள் பயிற்சி பெறும் காட்சி இடம்பெற்றுள்ளது. அதோடு சிஞ்ஜியாங்கில் உள்ள சில புகைப்படங்களும் அதில் இடம்பெற்றுள்ளது. இதில் சீன போலீசார் தெருக்களில் இருப்பது போன்ற காட்சிகளும் இடம்பெற்றுள்ளது. இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதில் சீன அதிபர் சி ஜின்பிங் உருவப்படம், சீன கொடியை எரிக்கும் காட்சி இடம்பெற்றுள்ளது. அதில் பேசிய உய்குர் பயங்கரவ £தி ஒருவன்,‘‘நாங்கள் இப்போது சமய நம்பிக்கை அற்றவர்களுடன் உலகம் முழுவதும் சண்டையிட்டு கொண்டிருக்கிறோம். எங்களுடன் சேர்ந்து வலுவான வாழ்க்கை வாழுங்கள். கண்டிப்பாக எங்களது கொடி அமெரிக்கா, சீனா, ரஷ்யா மற்றும் இதர சமய நம்பிக்கை அற்ற நாடுகளில் பறக்க விடுவோம்’’ என்றார்.

உய்குரில் கோஷ்மிட்ட ஒரு நபர் பேசுகையில்,‘‘ நமது இஸ்லாமிய மண் ரத்தம் சிந்தி கட்டுமானம் செய்யப்பட வேண்டும்’’ என்றார். மேலும் அந்த வீடியோவில் மக்கள் தியாகிகளாக மாறப்போவதாக கூறும் காட்சி இடம்பெற்றுள்ளது. சிஞ்ஜியாங் என்பதை துர்கிஸ்தான் என்று உய்குர்கள் அழைக்கின்றனர். அதனால் நாங்கள் துர்கிஸ்தானியாக அடையாளம் காணப்படுவோம்’’ என அந்த வீடியோவில் தெரிவிக்கின்றனர்.

சிஞ்ஜியாங்கின் தெற்கு உய்குரின் மைய பகுதியான காஸ்கர் நகரில் பழைய சில்கி ரோடில் யார்கண்ட் அருகே இருந்து ஒருவர் பேசும் காட்சி பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒரு பயங்கரவாதி பேசுகையில்‘‘தீய சீன கம்யூனிஸ்ட்கள் நாத்திகவாதிகளின் எடுபிடிகள். எங்களது கண்ணீருக்கு பதலடியாக உங்களது ரத்தம் கடவுள் உத்தரவுப்படி ஆறுகளில் ஓடும்’’ என்று பேசினான். இந்த வீடியே £வை அமெரிக்காவில் பயங்கராவத குழுக்களை ஆன்லைனில் கண்காணிக்கும் எஸ்ஐடிஇ என்ற நுண்ணறிவு பிரிவு வெளியிட் டுள்ளது. மேலும், அதில் அடையாளம் தெரியாத இரண்டு பேரை கொல்லும் காட்சியும் இடம்பெற்றுள்ளது.

இது குறித்து சீனா வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் ஜெங் சுவாங் கூறுகையில்,‘‘ அந்த வீடியோ குறித்து நான் அறியவில்லை. அதை பார்க்கவும் இல்லை. ஆனால் ஒன்று மட்டும் உறுதியாக கூறமுடியும். பயங்கரவாதம் எந்த வகையில் வந்த £லும் சர்வதேச ஒற்றுமையுடன் அதை முறியடிப்போம். கிழக்கு துர்கிஸ்தான் படைகள் தொடர்ந்து சீனாவின் பாதுகாப்புக்கு தீவிர அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்த பிரிவினை£த சக்திகளையும், பயங்கரவாதிகளையும் சர்வதேச சமுதாய பங்களிப்புடன் முறியடிப்போம்’’ என்றார்.

வெளிநாட்டு பயங்கரவாதிகள் சிஞ்ஜியாங்கில் பதற்றத்தை ஏற்படுத்தி வருகின்றனர். கிழக்கு துர்கிஸ்தான் என்ற தனி நாடு கேட்டு பிரிவினைவாதிகள் தொடர்ந்து பிரச்சாரம் செய்து வருகின்றனர். சிஞ்ஜியங்கில் அமைதியின்மை நிலவுவதற்கு சீனாவின் கொள்கைகளை விரும்பாத உய்குர்கள் தான் இந்த செயலில் ஈடுபட்டுள்ளனர். எவ்வித அடக்குமுறையை சீனா ஏற்காது.

வீடியோவை ஆய்வு செய்த நியூ ஆர்லியன்ஸ் லயோலா பல்கலைக்கழக உய்குர் நிபுணர் ரியான் தும் கூறுகையில், ‘‘இந்த வீடியாவில் உள்ள உய்குர்கள் ஐஎஸ்எஸ் பாணியில் தான் பேசுகின்றனர். மேலும், ஐஎஸ்ஐஎஸ்ன் தந்திரங்கள், பிரச்சாரங்கள், கருத்தியல் ஆகியவை ஐஎஸ்ஐஎஸ் அமைப்போடு ஒத்துப்போகிறது. ஆனால் அதில் உய்குர்ஸ் மற்றும் சீனா இடையிலான உறவு குறித்து எதுவும் இடம்பெறவில்லை’’ என்றார்.