பாஜகவின் “ஜெய் ஸ்ரீ ராம்” க்கு எதிராக மம்தா பானர்ஜியின் “ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா”

மாயாபூர், மேற்கு வங்கம்

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி சர்வதேச கிருஷ்ண பக்த இயக்கமான இஸ்க்கானுக்கு ஆலயம் அமைக்க நிலம் வழங்கி உள்ளார்.

சர்வதேச கிருஷ்ண பக்தர்களின் இயக்கமான இஸ்க்கான் ( INTERNATIONAL SOCIETY FOR KRISHNA CONSCIOUSNESS) உலகப் புகழ் பெற்றதாகும். ஸ்ரீலஸ்ரீ பிரபுபாதா அமைத்த இந்த இயக்கத்தில் பல நாட்டினரும் உள்ளனர். இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் பல நகரங்களில் இந்த இயக்கம் கிருஷ்ணர் ஆலயம் அமைத்துள்ளது. இந்த இயக்கம் மேற்கு வங்க மாநிலத்தில் மாயாப்பூரில் ஒரு மாபெரும் ஆலயம் அமைக்க விரும்பியது.

இந்த இயக்கத்துக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மாயாப்பூர் நகரில் 350 ஏக்கர் நிலம் அளித்துள்ளார். இதற்காக மேற்கு வங்க அரசு நில உச்சவரம்பு சட்டத்தை தளர்த்தி உள்ளது. ஏற்கனவே மம்தாவின் அரசு தொழிற்சாலை அமைக்க நில ஒதுக்கீடு செய்ய நில உச்சவரம்பு சட்டத்தை தளர்த்தி உள்ளது. ஒரு ஆலயம் அமைக்க மேற்கு வங்க அரசு இவ்வாறு சலுகை அளித்தது இதுவே முதல் முறையாகும்.

தற்போது இஸ்தான்புல் நகரில் உள்ள ஹாகியா சோபியா அருங்காட்சியகம் உலகின் உயர்ந்த கோபுரத்தை கொண்டுள்ளது. பிரபல கார் உற்பத்தியாளரான ஹென்றி ஃபோர்ட் இந்த கோபுரத்தை அமைத்துள்ளார். மாயாப்பூர் கிருஷ்ணன் கோவில் கோபுரம் அதை விட உயரமானதாக கட்டப்பட உள்ளது.

கிருஷ்ணர் கோவிலுக்கு நிலம் அளித்ததன் மூலம் மம்தா பானர்ஜியும் பாஜக வரிசையில் இணைந்துள்ளதாக அரசியல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். அதற்கு ஏற்றார்போல் இஸ்க்கான் இயக்கம் வெளியிட்டுள்ள விடியோவில் மம்தா பானர்ஜியின் புன்னகை பூக்கும் படம் தெரிகிறது. பின்னணி குரலாக ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா என்னும் கோஷம் ஒலிக்கிறது. அத்துடன் கிருஷ்ண பக்தர்களுக்கு உதவிய மம்தா பானர்ஜிக்கு வாக்களிக்க வேண்டும் என அந்த வீடியோவில் கோரிக்கை விடப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published.