ஐஎஸ்எல் கால்பந்து – தனது முதல் வெற்றியை ஈட்டிய கேரளா!

பனாஜி: ஐஎஸ்எல் கால்பந்தில், ஐதராபாத் அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வென்ற கேரளா, இத்தொடரில் தனது முதல் வெற்றியைப் பதிவு செய்தது.

இத்தொடரில், கேரள அணி இதுவரை ஒரு வற்றியைக்கூட ருசிக்காமல் இருந்தது. இந்நிலையில், லீக் போட்டியொன்றில் ஐதராபாத் அணியுடன் மோதியது. போட்டியின் 29வது நிமிடத்தில் கேரளாவின் அப்துல ஹக்கு ஒரு கோலடிக்க, முதல் பாதியில் கேரள அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றது.

இரண்டாவது பாதி ஆட்டத்தின் 88வது நிமிடத்தில் கேரளாவின் ஜோர்டான் முர்ரே ஒரு கோலடிக்க கேரள அணி 2-0 என்ற கணக்கில் வலுவான முன்னிலைப் பெற்றது.

ஆனால், இதற்கான பதிலடியை ஐதராபாத் அணியால் இறுதிவரை கொடுக்கவே முடியவில்ல‍ை. இறுதியில், கேரள அணி இத்தொடரில் தனது முதல் வெற்றியைப் பதிவு செய்தது.