ஐஎஸ்எல் கால்பந்து – கொல்கத்தா & ஈஸ்ட் பெங்கால் அணிகள் வெற்றி!

பனாஜி: ஐஎஸ்எல் கால்பந்து 7வது சீசன் லீக் போட்டிகளில், கொல்கத்தா மோகன் பகான் அணி, வடகிழக்கு யுனைடெட் அணியையும், ஈஸ்ட் பெங்கால் அணி, ஒடிசா அணியையும் வீழ்த்தின.

நடப்பு சாம்பியனாக இருக்கும் கொல்கத்தா அணி, வடகிழக்கு யுனைடெட் அணியை சந்தித்தது. இப்போட்டியில், 2-0 என்ற கணக்கில் வென்றது கொல்கத்தா அணி. அந்த அணி, இதுவரை மோதிய மொத்தம் 9 போட்டிகளில், 6 வெற்றிகள், 2 டிரா மற்றும் 1 தோல்வி என்று மொத்தம் 20 புள்ளிகள் பெற்று புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

மற்றொரு போட்டியில், ஈஸ்ட் பெங்கால் அணி, 3-1 என்ற கோல்கணக்கில் ஒடிசா அணியை வீழ்த்தியது. ஈஸ்ட் பெங்கால் அணி, இத்தொடரில்தான் முதன்முறையாக அறிமுகம் ஆனது. தற்போதைய நிலையில், அந்த அணி மொத்தமாக 10 புள்ளிகளைப் பெற்றுள்ளது.