சென்னை:

ந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியில் பங்குபெறும் சென்னையின் எஃப்சி அணிக்கு புதிய பயிற்சியாளர் நியமிக்கப்பட்டு உள்ளார். தற்போதுள்ள இங்கிலாந்து வீரர் ஜான் கிரகோரிக்கு பதில் புதிய .பயிற்சியாளராக ஸ்காட்லாந்தைச் சேர்ந்த ஓவன் கொய்லே  நியமிக்கப்பட்டு உள்ளார்.

இந்தியன் சூப்பர் லீக் (Indian Super League) இந்தியாவில் நடத்தப்பெறுகின்ற தொழில்முறை கால்பந்து போட்டியாகும். கடந்த 2013 ஆம் ஆண்டு அக்டோபர் 21ந்தேதி அன்று இந்திய கால்பந்து கூட்டமைப்பு, ரிலையன்ஸ் மற்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவங்களின் கூட்டணியால் தொடங்கப்பட்டது. இதில் 10 மாநிலங்கள் இடம்பெற்றுள்ளன. இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி ஆண்டுதோறும் நடைபெற்று வருகின்றன.


இந்தியன் சூப்பா் லீக் கால்பந்து அணியில் இடம்பெற்றுள்ள சென்னை அணியான  சென்னையின் எஃப்சி அணி ஏற்கனவே 2முறை பட்டம் வென்றுள்ளது. அணியின் பயிற்சியாளராக இங்கிலாந்தைச் சோந்த ஜான் கிரகோரி இருந்து வந்தார். ஆனால், கடந்த 2018-19 சீசனின் போது சென்னை எஃப்சி அணி பெரும் தோல்வியை சந்தித்தது. அதுபோல தற்போது நடைபெற்று வரும்  சீசனிலும்  சென்னை எஃப்சி அணியால் சோபிக்க முடியவில்லை.

இதனால், தோல்விகளுக்கு பொறுப்பேற்று தலைமைப் பயிற்சியாளா் பதவியில் விட்டு  விலகி விட்டாா் ஜான் கிரகோரி. இதையடுத்து புதிய பயிற்சியாளர் தேடும் படலம் நடைபெற்றது.

இந்த நிலையில்,  ஸ்காட்லாந்தைச் சேர்ந்த 53 வயதான ஓவன் கொய்லே சென்னையின் எஃப்.சி அணிக்குப் புதிய பயிற்சியாளராக  இந்த சீஸன் முடியும் வரை தேர்ந்வு செய்யப்பட்டு இருப்பதாக சென்னை எஃப்சி அணி நிர்வாகிகள் தெரிவித்து உள்ளனர்.

டிசம்பர் 9 அன்று ஜாம்ஷெட்பூா் எஃப்.சி அணியை எதிர்கொள்ள உள்ளது குறிப்பிடத்தக்கது.