பனாஜி: ஐஎஸ்எல் கால்பந்து 7வது சீசனின் லீக் போட்டியொன்றில், சென்னை அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றிகொண்டது பெங்களூரு அணி.

ஆட்டத்தின் 7வது நிமிடத்தில், முரட்டுத்தனத்தைக் காண்பித்த பெங்களூரு அணியின் ஆஷிக் குருனியன் மஞ்சள் அட்டைப் பெற்றார். பின்னர், 21வது நிமிடத்தில், சென்னையின் எல் சபியாவும் மஞ்சள் அட்டைப் பெற்றார். இதனிடையே, கோலடிக்க கிடைத்த வாய்ப்புகளை இரு அணியினரும் தவறவிட்டனர். இதனால், முதல் பாதி ஆட்டம் கோல்கள் இன்றி முடிந்தது.

இரண்டாவது பாதி ஆட்டம் தொடங்கியபோதும், இணி அணியினருக்கும் கோல் முயற்சிகள் கைக்கூடவில்லை. பின்னர், ஆட்டத்தின் 56வது நிமிடத்தில் பெங்களூரு அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைக்கவே, அந்த அணியின் கேப்டன் சுனில் செத்ரி அதை கோலாக மாற்றினார்.

இதற்கு பதிலடியாக,கோலடிக்க முயற்சித்த சென்னை அணியின் முயற்சிகள் இறுதிவரை கைக்கூடவே இல்லை. இதனால், இறுதியில், பெங்களூரு அணி 1-0 என்ற கணக்கில் சென்னையை வீழ்த்தியது.