ஐஎஸ்எல் கால்பந்து – கோவா vs வடகிழக்கு யுனைடெட் அணி போட்டி டிரா!

பனாஜி: ஐஎஸ்எல் கால்பந்து 7வது சீசனில், கோவா – வடகிழக்கு யுனைடெட் அணிகளுக்கு இடையிலான போட்டி, 1-1 என்ற கணக்கில் டிராவில் முடிந்தது.

போட்டியில், 40வது நிமிடத்தில், பெனால்டிக் வாய்ப்பில், வடகிழக்கு அணியின் சில்லா கோலடித்து, தனது அணிக்கு முன்னிலை ஏற்படுத்திக் கொடுத்தார்.

ஆனால், அந்த அணியின் மகிழ்ச்சி நீண்டநேரம் நீடிக்கவில்லை. அடுத்த 3வது நிமிடத்திலேயே, கோவா அணியின் இகோர் அங்குலோ ஒரு கோலடித்து பதிலடி கொடுத்ததால், ஆட்டத்தின் முதல் பாதி 1-1 என்ற கணக்கில் சமநிலையில் முடிந்தது.

அதேசமயம், இரண்டாவது பாதி ஆட்டத்தில் கிடைத்த கோல் வாய்ப்புகளை இரு அணியினருமே தவறவிட, கடைசியில் ஆட்டமானது 1-1 என்று டிராவிலேயே முடிந்துபோனது.