ஐஎஸ்எல் கால்பந்து – ஒடிசா vs வடகிழக்கு ஆட்டம் 2-2 டிராவில் முடிந்தது!

பனாஜி: ஐஎஸ்எல் கால்பந்து 7வது சீசனில், ஒடிசா – வடகிழக்கு அணிகள் மோதிய ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் டிரா ஆனது.

ஆட்டத்தின் 22வது நிமிடத்தில் ஒடிசாவின் டீகோ மவுரிசியோ முதல் கோலடித்து, தனது அணிக்கு முன்னிலைப் பெற்று தந்தார். அதற்கு பதிலடியாக, முதல் பாதி ஆட்டத்தின் ஸ்டாப்பேஜ் நேரத்தில் வடகிழக்கு அணியின் பெஞ்சமின் தலையால் முட்டி ஒரு கோலடிக்க, முதல் பாதி ஆட்டம் 1-1 என்ற கணக்கில் டிராவில் முடிந்தது.

இரண்டாவது பாதி ஆட்டத்தின் 65வது நிமிடத்தில், வடகிழக்கு அணியின் அப்பியா ஒரு கோலடிக்க, அந்த அணி முன்னிலைப் பெற்றது. ஆனால், அடுத்த 2வது நிமிடத்திலேயே ஒடிசாவின் கோலி அலெண்சாண்டர் ஒரு கோலடித்து பதிலடி கொடுக்க, நிலைலை 2-2 என்றானது.

அதன்பிறகு, கோலடிப்பதற்கு இரண்டு அணிகளும் மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை. இறுதியில், 2-2 என்ற கணக்கில் ஆட்டம் டிராவில் முடிந்தது.