ஐஎஸ்எல் கால்பந்து – பெங்களூரு vs ஐதராபாத் ஆட்டம் டிரா!

பனாஜி: ஐஎஸ்எல் கால்பந்து போட்டியில், பெங்களூரு – ஐதராபாத் அணிகள் மோதிய ஆட்டம், கோல்கள் எதுவும் போடப்படாமல் டிராவில் முடிவடைந்தது.

ஐஎஸ்எல் கால்பந்து 7வது சீசனில், ரவுண்ட் ராபின் முறையில் லீக் ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதில், நேற்றையப் போட்டியில், பெங்களூரு – ஐதராபாத் அணிகள் மோதின.

முதல் பாதியில், ஐதராபாத் அணியின் கோல் முயற்சிகளை, பெங்களூரு அணி திறமையாக முறியடித்தது. முதல் பாதி ஆட்டம் கோல் எதுவுமின்றி முடிவடைந்தது.

இரண்டாவது பாதியில், பெங்களூரு அணிக்கு கிடைத்த வாய்ப்பும் வீணாக்கப்பட்டது. இரண்டும் அணிகள் முயன்றும், இரண்டாவது பாதியிலும் கோல்கள் விழவில்லை. இதனால், ஆட்டம் டிராவில் முடிவடைந்தது.