ஐஎஸ்எல் கால்பந்து – ஜாம்ஷெட்பூரை 2-1 கணக்கில் சாய்த்த சென்னை!

பனாஜி: ஐஎஸ்எல் கால்பந்து 7வது சீசனில், தனது முதல் லீக் போட்டியில், ஜாம்ஷெட்பூரை 2-1 என்ற கணக்கில் வென்றுள்ளது சென்னை அணி.

போட்டி துவங்கிய 53வது வினாடியிலேயே ஒரு கோலடித்து சென்னை அணி அதிர்ச்சி கொடுத்தது. அதன்பிறகு கிடைத்த சில நல்ல வாய்ப்புகளை அந்த அணி வீணடித்தது.

அதன்பிறகு, போட்டியின் 25வது நிமிடத்தில் சென்ன‍ை அணிக்கு பெனால்டிக் வாய்ப்பு கிடைக்க, அதை கோலாக மாற்றி 2-0 என்ற கணக்கில் வலுவான முன்னிலைப் பெற்றது.

இந்நிலையில், 36வது நிமிடத்தில் ஜாம்ஷெட்பூர் அணி ஒரு கோலடித்தது. முதல் பாதி ஆட்டம் 2-1 என்ற கணக்கில் முடிவடைந்தது.

இரண்டாவது பாதி ஆட்டத்தில், கிடைத்த வாய்ப்புகள் வீணடிக்கப்பட, எந்த அணியாலும் கோலடிக்க முடியவில்லை. முடிவில், 2-1 என்ற கணக்கில் சென்னை அணி வென்றது.