டில்லி,
நேற்று நடைபெற்ற ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் கேரள அணியை2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி டில்லி அணி  முதலிடத்திற்கு முன்னேறியது.
ஐஎன்எஸ் கால்பந்து போட்டி இந்தியாவில் நடைபெற்று வருகிறது. 3வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்) கால்பந்து தொடரின் 30வது லீக் போட்டி நேற்று டெல்லி நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்றது.
டெல்லி அணியான டைனமோசும், கேரள அணியான  பிளாஸ்டர்சும் போட்டியில் இறங்கின. டெல்லி அணியினரின் தாக்குதலை சமாளிக்கும் விதமாக கேரள அணியினர்  தடுத்து விளையாடினர்.
isl
விளையாட்டின் பரபரப்பான சூழ்நிலையில்,  கோல் பகுதியில் 6 கேரளா வீரர்கள் தடுப்பணை போல் வரிசையாக நின்றனர்.  இதனால் டெல்லி வீரர்களால் உள்ளே நுழைய முடியவில்லை.
பந்தை அதிக நேரம்  தம் கட்டுப்பாட்டில் வைத்திருந்த  டெல்லி வீரர்கள்  சுற்றிக்கொண்டிருந்தாலும் முதல் பாதியில் கோல் எதுவும் அடிக்க முடியவில்லை.
அடுத்த பாதியில்  டெல்லி வீரர்கள் வியூகங்களை மாற்றி களம் புகுந்தனர். இதன் காரணமாக  55-வது நிமிடத்தில் டெல்லி வீரர் ரிச்சர்ட் காட்ஸி கோல் அடித்தார். ஆனால், அது  ஆப்-சைடு  கோல் என்று அறிவிக்கப்பட்டது.
ஆனாலும், துடிப்பாக விளையாடி  அடுத்த சில நிமிடத்தில் அபாரமாக போல் அடித்து, தனது கோல் கணக்கை தொடங்கியது.
ரிச்சர்ட் காட்ஸி, கேரளாவின் தடுப்பாட்டக்காரர்களை ஏமாற்றி தட்டிக்கொடுத்த பந்தை சக வீரர் கீன் லீவிஸ் கோலாக்கினார்.
இதன் காரணமாக கேரள வீரர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.  இந்த நிலையை கவனத்தில் கொண்ட டெல்லி வீரர்கள், கேரளாவின் மந்த நிலையை பயன்படுத்தி  மற்றொரு கோலை அடித்தனர்.
60-வது நிமிடத்தில் ரிச்சர்ட் காட்ஸி, ‘கிராஸ்’ செய்த பந்து அனைவரையும் தாண்டி கோல் கம்பத்தின் வலது பகுதி யில் நின்றிருந்த மற்றொரு டெல்லி வீரர் மார்செலினோ அருகே சென்றது. அதை அவர் தலையால் முட்டி சூப்ப ராக கோலாக்கினார்.
முடிவில், டெல்லி டைனமோஸ் அணி 2-0 என்ற கோல் கணக்கில் கேரளா பிளாஸ்டர்சை வீழ்த்தியது.
வலுவான  கேரளா பிளாஸ்டர்ஸ் இந்த சீசனில் ஒரு ஆட்டத்தில் 2 கோல்களை விட்டுக்கொடுத்திருப்பது இதுவே முதல் முறையாகும். 3-வது இடத்தில் இருந்த டெல்லி அணி இந்த வெற்றியின் மூலம் (3 வெற்றி, 4 டிரா, ஒரு தோல்வி) 13 புள்ளிகளுடன் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.
இன்று இரவு 7 மணிக்கு கவுகாத்தியில் நடக்கும் ஆட்டத்தில் கவுகாத்தி-மும்பை அணிகள் மோதுகின்றன.