Random image

பனாமா பேப்பர் ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட நவாஸ் ஷெரீப் குடும்பத்தினர் விடுதலை: நீதிமன்றம் அதிரடி

இஸ்லாமாபாத்:

னாமா பேப்பர் விவகாரம் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், அவரது மகள் மரியம், மருமகன் சப்தார் நவாஸ் ஆகியோரை பாகிஸ்தான் உயர்நீதிமன்றம்  விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது.

பனாமா நாட்டில் உள்ள மொசாக் பொன்சேகா நிறுவனத்தின் மூலம் பல்வேறு நாட்டுப் பிரமுகர்கள் வெளிநாடுகளில் சட்ட விரோதமாக தங்களின் கறுப்புப் பணத்தை முதலீடு செய்ததின் ஆவணங்கள் பனாமா பேப்பர்சில் வெளியானது.

இது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதில் பாகிஸ்தான் பிரதமராக நவாஸ் ஷெரீப் குடும்பத்தினர் மீது குற்றச்சாட்டுக்கள் கூறப்பட்டிருந்தது.

இது தொடர்பான ஊழல் வழக்கில், குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு,  கடந்த 2016ம் ஆண்டு  ஜூலை மாதம் பாகிஸ்தான்  சுப்ரீம் கோர்ட்டால் நவாஸ் ஷெரீப் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

அவருக்கு 10 ஆண்டுகள் சிறையும், ரூ.74 கோடி அபராதமும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.  நவாஸ் ஷெரிப், மகள் மரியம், மருமகன் சப்தார், இவர்களின் மகன்கள் ஹசன், ஹூசைன் ஆகியோரும் நீதிமன்றத்தால், குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர்.

இதனையடுத்து நவாஸ் ஷெரீப், அவரது மகள் மரியம் மற்றும் மருமகன் கேப்டன் சப்தார் நவாசு கைது செய்யப்பட்டு அடியலா சிறையில் அடைக்கப்பட்டனர்.

உச்சநீதி மன்ற தீர்ப்பை  எதிர்த்து நவாஸ் ஷெரீப் தரப்பில் மேல்முறையீடு செய்யபப்ட்டது. இந்த வழக்கை விசாரித்த இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றம், நவாஸ் ஷெரீப், அவரது மகள் மற்றும் மருமகன் கேப்டன் சப்தார் நவாசுக்கு எதிரான தீர்ப்புக்கு இடைக்கால தடை விதித்துள்ளது.

மேலும் இந்த மூன்று பேரையும் விடுதலை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.