Random image

சிறையில் உள்ள பாக். முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீபுக்கு ஜாமின்

இஸ்லாமாபாத்:

னாமா பேப்பர் ஊழல் காரணமாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீபுக்கு பாகிஸ்தான் உயர்நீதி மன்றம் ஜாமின் வழங்கி உள்ளது.

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் மற்றும் அவரது மகள் ஆகியோரை லாகூர் விமான நிலையத்தில் காவல் துறையினர் கடந்த ஜூலை மாதம் கைது செய்யப்பட்டனர்.

பனாமா பேப்பர்ஸ் ஊழல் வழக்கில் நவாஸ் ஷெரீப் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால், அவருக்கு 10 ஆண்டுகள் சிறையும், ரூ.74 கோடி அபராதமும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.  நவாஸ் ஷெரிப், மகள் மரியம், மருமகன் சப்தார், இவர்களின் மகன்கள் ஹசன், ஹூசைன் ஆகியோரும் நீதிமன்றத்தால், குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர்.

மரியத்துக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறையும், அபராதமும் விதிக்கப்பட்டது.  இந்நிலையில், நவாஸ்ஷெரீபின்  மனைவியின் புற்றுநோய், சிகிச்சைக்காக லண்டனில் தங்கியிருந்த நவாஸ் ஷெரீப் மற்றும் மகள் மரியம் ஆகியோர் அபுதாபி வழியாக லாகூருக்கு  வந்தபோது கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த நிலையில், நவாஸ் ஷெரீபின் மனைவி புற்றுநோய் காரணமாக கடந்த 11ந்தேதி மரண மடைந்தார். அவரது இறுதிச்சடங்குக்கு பரோலில் நவாஸ் ஷெரீப் வந்து கலந்து கொண்டார்.

அதைத்தொடர்ந்து  நவாஸ் ஷெரீப் தரப்பில் ஜாமின் கேட்டு பாகிஸ்தான் உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கின் பாகிஸ்தான் உயர்நீதி மன்றம் அவருக்கு ஜாமின் வழங்கி உள்ளது.