கிறிஸ்துவர்களுக்காக  தாக்குதல் நடத்திய இஸ்லாமிய நாடு

கெய்ரோ:

உலகெங்கிலும் மத மோதல்கள் நடந்து வரும் சூழலில்,  இஸ்லாமிய நாடு ஒன்றில் கிறிஸ்தவர்கள் தாக்கப்பட, கொதித்துப்போய் அந்த நாட்டின் மீது தாக்குதல் நடத்தியுள்ளது இன்னொரு இஸ்லாமிய நாடு.

லிபியா நாட்டில் இஸ்லாமிய பயங்கரவாதிகள் பல குழுக்களாக செயல்பட்டு வருகிறார்கள். அங்கு வசிக்கும் கிறிஸ்துவ மக்களை தாக்கிக் கொல்வதை வழக்கமாக கொண்டிருக்கிறார்கள். கடந்த சில மாதங்களில் அங்கு இஸ்லாமிய பயங்கரவாதிகளால் 70 கிறிஸ்தவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் கடந்த வாரம், இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பு ஒன்று,  பேருந்து ஒன்றின் மீது தாக்குதல் நடத்தியது. இதில் 28 பேர் கொல்லப்பட்டவர்கள்.  24 பேர் படுகாயமடைந்தனர். இவர்கள் அனைவரும் கிறிஸ்துவர்கள். சர்ச் ஒன்றில் ஜெபம் செய்துவிட்டு  அவர்கள் திரும்பிக்கொண்டிருந்த போதுதான் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது.

இப்படி தொடரந்து லிபியாவில், இஸ்லாமிய பயங்கரவாதிகள், கிறிஸ்துவ மக்களைக் கொன்று குவிப்பதை அருகில் இருக்கும் எகிப்து நாடு கண்டித்துக்கொண்டே இருந்தது. இந்த நிலையில் சமீபத்திய பயங்கரவாத தாக்கதலுக்குப் பிறகு, பொறுத்துக்கொள்ள முடியாமல், வெகுண்டெழுந்தது.

ஆம்.. லிபியாவில் தர்னா நகரில் உள்ள பயங்கரவாதிகள் முகாம் மீது எகிப்தின் ஆகாயப் படை விமானங்கள் ஆறு முறை கடும் தாக்குதல் நடத்தின. இத் தாக்குதலில் இஸ்லாமிய பயங்கரவாதிகளின் முகாம்கள் பல தரைமட்டமானதுடன், பயங்கரவாதிகள் பலரும் கொல்லப்பட்டனர்.

இந்தத் தாக்குதல் குறித்து  எகிப்து நாட்டின் அதிபர் அப்துல் ஃபடா,  அல் சிசி தொலைக்காட்சி செய்தி ஒன்றில் உறுதிப்படுத்தினார். ஆனால் அவர் தனது உரையில் தாக்குதல் நடத்தப் பட்ட இடம் எதுவென குறிப்பிடப் படவில்லை.

எகிப்து மக்கள் தொகையான 92 மில்லியனில் சுமார் 10% கிறித்துவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

You may have missed