டில்லி,
லாக் சட்டத்தை திருத்த கோரிய வழக்கில் மத்திய அரசின் முடிவுக்கு இஸ்லாமிய அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
அதில், மத சட்டத்தை தவிர்த்த்?  மக்கள் மீது ஒரு பொது சிவில் சட்டத்தை திணிப்பது எதிர்மறை விளைவுகளையே ஏற்படுத்தும் என்று கூறியுள்ளது.
tripple-talaq
இஸ்லாமியர்களின் விவாகரத்து முறையான ‘ தலாக்’ முறைக்கு, இஸ்லாமிய மதத்தினரிடையே எதிர்ப்புகள் கிளம்பியுள்ள நிலையில், மத்திய அரசும்  எதிர்ப்பு தெரிவித்து  உள்ளது.
இஸ்லாமியர்களின்  கணவன் மனைவிக்குள் பிணக்கு ஏற்பட்டால் ஷரியத்  மத சட்டப்படி தலாக் சொல்லி விவாகரத்து செய்வது வழக்கம். மூன்று முறை ‘தலாக்’ சொல்லி,  கட்டிய மனைவி தள்ளி வைத்துவிட்டு, அடுத்த நிக்காஹ் எனப்படும் திருமணம் செய்து கொள்வது வழக்கம். இஸ்லாமிய சட்டப்படி ஒருவர் எத்தனை திருமணம் வேண்டுமானாலும் செய்யலாம்.
இதுபோன்ற செயல்களை தடுக்கும் பொருட்டு, தலாக்-க்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் முஸ்லிம் சமுகத்தை சேர்ந்த பல பெண்கள்  மனுக்கள் தாக்கல் செய்துள்ளனர்.
talaq
மனுவை விசாரித்த உச்ச நீதி மன்ற நீதிபதிகள்,  மத்திய அரசிடம் விளக்கம்  கேட்டு நோட்டீஸ் அனுப்பி இருந்தது.
அதை ஏற்று, மத்திய சட்ட அமைச்சகம் சார்பில் அதன் கூடுதல் செயலாளர் முகுலிதா விஜயவர்கியா , முஸ்லிம்களிடையே வழக்கத்தில் உள்ள ‘3 முறை தலாக்’ நடைமுறைக்கும், பலதார மணத்துக்கும் மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்து 29 பக்க பதில் மனுவை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்தார்.
அதில்,  இந்திய அரசியல் சட்டம் பாலின சமத்துவத்தையும், மதச்சார்பின்மையையும் வலியுறுத்துகிறது. ஆண்–பெண் சமத்துவமும், பெண்களின் கண்ணியமும் விவாதத்துக்கு அப்பாற்பட்டவை. அதில் சமரசத்துக்கு இடமில்லை. ஆண்களின் பழக்கத்தால் பெண்கள் சமூக ரீதியாக, பொருளாதார ரீதியாக பாதிக்கப்படும் எந்த நடைமுறையும் அரசியல் சட்டத்துக்கு முரணானது.
பெண்களுக்கான சம உரிமையை மறுப்பதற்கு மதம் காரணமாக இருக்கலாமா என்ற அடிப்படை கேள்வியை கோர்ட்டுதான் தீர்மானிக்க வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தது.
ஆனால் மத்திய அரசின் இந்த முடிவுக்கு, ஜமாத்-இ-இஸ்லாமி ஹிந்த் என்ற அமைப்பு கண்டனம் தெரிவித்து உள்ளது.

இதுதொடர்பாக ஜமாத் இ இஸ்லாமி ‌ஹிந்த் அமைப்பின் தலைவர் மவுலானா சையது ஜலாலுதீன் உமரி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
விவாகரத்து, பலதார மணம், உள்ளிட்ட தனிமனித சட்டங்கள் தங்களது மதத்தின் ஒரு அங்கமாகவே இஸ்லாமியர்கள் கருதுவதாக குறிப்பிட்டுள்ளார்.
இஸ்லாமியர்களின் இந்த நிலைப்பாட்டை மத்திய அரசு மதிக்கவேண்டும் என்றும் அதற்கு முடிவு கட்ட முயலக் கூடாது என்றும் அவர் கூறியுள்ளார்.
மக்கள் மீது ஒரு பொது சிவில் சட்டத்தை தி‌ணிப்பது எதிர்மறை விளைவுகளையே ஏற்படுத்தும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.