தென் மாநிலங்களில் பரவும் ஐஎஸ் நெட்வொர்க்: டெல்லி போலீஸ் அதிர்ச்சி தகவல்

டெல்லி: தென் தமிழகத்தில் ஐஎஸ் தீவிரவாதிகள் நெட்வொர்க் இருப்பதாக டெல்லி போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

டெல்லி போலீசார் 3 தீவிரவாதிகளை கைது செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட பல விசாரணைகளில் முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளன. அது பற்றி டெல்லி போலீசார் கூறியிருப்பதாவது:

கைது செய்யப்பட்டவர்கள் பல மாநிலங்களில் ஐஎஸ் அமைப்பை வலுப்படுத்த முனைந்துள்ளனர். மகாராஷ்டிரா, கேரளா, கர்நாடகா, தமிழகம் ஆகிய மாநிலங்களில் ரகசிய கூட்டங்கள் நடத்தி உள்ளனர்.

11 பேர் ஐஎஸ் தொடர்பில் இருக்கின்றனர். அவர்களை அனைவரும் விரைவில் பிடிபடுவார்கள். இந்த கும்பலுக்கு மூளையாக இருக்கும் நபரை பிடிக்க தமிழகம், குஜராஜ், கேரளா ஆகிய மாநிலங்களில் போலீசார் முகாமிட்டுள்ளனர்.

இந்த தேடுதலில் ஒருவர் குஜராதில் பிடிபட்டுள்ளார். விரைவில் அவரிடம் விசாரணை நடத்தப்படும். வில்சன் கொலையில் தொடர்புடைய ஷமீம், தவுபிக் ஆகிய இருவரையும் தேடி வருகிறோம் என்றும் கூறி உள்ளனர்.

 

கார்ட்டூன் கேலரி