அஸ்ஸாமில் நடைபெற்ற பொது தேர்வில் பனிரெண்டாம் வகுப்பில் ஏ.எஸ்.தப்பா மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். அஜ்மல் கல்லூரியில் படித்து வந்த இவர் பனிரெண்டாம் வகுப்பில் அறிவியல் பாடப்பிரிவை தேர்வு செய்தார். பொது தேர்வு எழுதிய தப்பா 500 மதிப்பெண்களுக்கு 486 மதிப்பெண்களை எடுத்து சாதனை படைத்துள்ளார். அஜ்மல் கல்லூரி சார்பில் இவருக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்ற மாக்களவை உறுப்பினரும், கல்லூரி நிவாக தலைவருமான மௌலானா பத்ருதீன் அஜ்மல் தப்பாவை பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தார்.

அஸ்ஸாமில் செயல்பட்டு வரும் அஜ்மல் கல்லூரி முஸ்லீம் மாணவர்களின் கல்வித்தரத்தை மேம்படுத்தும் விதமாக செயல்பட்டு வருகிறது. தப்பா தனது கடின உழைப்பின் மூலம் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளதாக கல்லூரி நிர்வாகம் பாராட்டியுள்ளது. மேலும், தப்பா அனைத்து மாணவர்களுக்கும் உதாரணமாக இருப்பார் எனவும் விழாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தப்பாவிற்கு நண்பர்கள் அரசியல் தலைவர்களிடம் இருந்து வாழ்த்துக்கள் வந்து குவிந்த வண்ணம் உள்ளன.

அஸ்ஸாமில் உள்ள 30 சதவிகித முஸ்லீம் மக்கள் பெங்காலி பேசி வருகின்றனர். எழுத்தறிவு இன்றி காணப்பட்ட அவர்கள் தற்போது தங்கள் பெயர்களை பிழையின்றி எழுதுவது முன்னேற்றத்தை நோக்கிய ஒரு மைல் கல்லாகும்