பிரிட்டனை சேர்ந்த 22 வயது இளம் மாணவன் கண்டறிந்த ஐசோபார் எனப்படும் குட்டி ஃப்ரிட்ஜ் தடுப்பூசி மருந்துகளை பதப்படுத்தும் பிரச்சனைக்கு தீர்வாக அமைந்துள்ளது.
isobar
இங்கிலாந்தின் லாபோரோ பல்கலைகழகத்தின் மாணவர் வில் ப்ராட்வேயின் கண்டுபிடிப்பான ஐசோபார் எனப்படும் சிறிய அளவிலான குளிர்பதனப்பெட்டி தடுப்பூசி மருந்துகளை 2 இலிருந்து 8 டிகிரி குளிர்நிலையில் முப்பது நாட்கள் வரை உறையாமல் பாதுகாக்கக்கூடியது. தடுப்பூசி மருந்துகள் உறைந்து போகும் பட்சத்தில் அவை பயனற்றவையாக மாறிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.
தடுப்பூசி மருந்துகள் உறைந்து போவதால் அதை பயன்படுத்த முடியாமல் வீணாக்கும் நிலை இதுவரை இருந்து வந்தது. அதனால் பல ஏழை நாடுகளை தடுப்பூசிகள் சென்றடைய முடியாத சூழலும் நிலவி வந்தது.
ஆனால் இந்தப் பிரச்சனைக்கு தீர்வு கண்டதன் மூலம் வில் ப்ராட்வே உலகம் முழுவதும் 1.5 மில்லியன் குழந்தைகளின் உயிரை காப்பாற்றிய மாபெரும் சேவையை செய்திருக்கிறார். இந்த கண்டுபிடிப்பை தான் வியாபாரமாக்கி பொருள் ஈட்டப்போவதில்லை என்று சொன்ன அவர். ஏழை மக்களுக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்ற துடிப்பே தன்னை இந்த சாதனையை நிகழ்த்த வைத்தது எனவும் குறிப்பிட்டார்.