ஜெருசலேம்

ஜெருசலேம்  தேவாலயத்தில் அமைந்துள்ள பிரார்த்தனை சுவற்றில் டிஜிடல் பிரார்த்தனைகளை எழுத இஸ்ரேல் அனுமதி அளித்துள்ளது.

ஜெருசலேம் நகரம் மூன்று மதத்துக்குத் தொடர்பான நகரம் ஆகும்.   இஸ்ரேல் நாட்டின் தலைநகரான இந்நகர் உலக வரலாற்றில் பிரபலமான நகரம் ஆகும்.   இந்நகரம் கிறித்துவ, யூத மற்றும் இஸ்லாமிய மத நிகழ்வுகளுடன் தொடர்பு உள்ள நகர் ஆகும்.   கொரோன அச்சுறுத்தலால் முடக்கம் அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது இந்நகரம் உள்ளூர் சுற்றுலாப் பயணிகளுக்கு மட்டும் திறக்கப்பட்டுள்ளது.

இந்நகரில் உள்ள தேவாலயத்தின் மேற்குப்புற சுவர் மிகவும் புகழ்பெற்றதாகும்.   உலகெங்கும் உள்ள பலர் இங்கு வந்து தமது பிரார்த்தனைகளையும் குறைகளையும் ஒரு காகிதத்தில் எழுதி இந்த சுவரின் கற்களுக்கு இடையே செருகி வைப்பது வழக்கமாகும்.  இந்த பிரார்த்தனைகளைக் கடவுள் படித்து நிறைவேற்றுவார் என்பது நம்பிக்கையாகும்.

தற்போது கொரோனா பரவுதல் காரணமாகப் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.  அதன்படி காகிதத்தில் எழுதி சுவரில் வைப்பது தடை செய்யப்பட்டுள்ளது.   இதனால் மக்கள் கடும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.  இதனால் அரசு இந்த சுவற்றில் டிஜிடல் பிரார்த்தனைகளை எழுத அனுமதித்துள்ளது.   இவை அனைத்தும் பிரிண்ட் செய்யப்பட்டு மேற்கு சுவற்றில் வைக்கப்படும் எனவும் அரசு உறுதி அளித்துள்ளது.