இஸ்ரேலில் கொரோனா தடுப்பூசியின் மனித சோதனை துவங்கியது

இஸ்ரேல்:
யூதா அரசாங்கத்தின் இரண்டாவது முழு அடைப்பு படிப்படியாக குறைந்து வருவதால், இஸ்ரேல் தனது சொந்த கொரோனவைரஸ் தடுப்பூசியின் மனித சோதனைகளை துவங்கியுள்ளது.

இரண்டு தன்னார்வலர்களுக்கு தனித்தனி மருத்துவமனைகளில் மருந்து செலுத்தப்பட்டுள்ளது, அடுத்த இரண்டு நாட்களில் அவர்கள் இருவரும் ஆரோக்கியமாக இருந்தால், அடுத்த கட்டமாக 80 பேருக்கு இந்த மருந்து செலுத்தப்பட உள்ளதாக இஸ்ரேல் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் அதிகாரிகளின் கூற்றுப்படி 80 தன்னார்வலர்களுக்கும் மருந்து செலுத்தப்படும், மருந்து செலுத்தப்பட்ட பின்னர் அவர்கள் வீட்டிற்கு அனுப்பப்படுவார்கள், அதன் பிறகு மூன்று வாரங்கள் அவர்களுக்கு ஏதும் பக்க விளைவு ஏற்படுகிறதா அல்லது வைரசுக்கு எதிரான ஆன்டிபாடிகள் உருவாகின்றதா என்று கண்காணிக்கப்படும்.

முதல் கட்டம் வெற்றிகரமாக அமைந்துவிட்டால், இரண்டாம் கட்டத்தின் வேலைகள் டிசம்பர் மாதத்தில் துவங்கப்படும், இரண்டாம் கட்டமும் வெற்றி அடைந்துவிட்டால், மூன்றாம் கட்டமாக 30,000 தன்னார்வலர்களுக்கு ஏப்ரல் 2021 ஆம் ஆண்டு மருந்து செலுத்தப்படும் என்று தெரிவித்துள்ளனர். மேலும் இந்த செயல்களை கண்காணிக்கவும் முடிவெடுக்கவும் சிறிது காலம் தேவைப்படும் என்று இஸ்ரேல் அரசாங்கம் தெரிவித்துள்ளது.