டெல் அவிவ்

ந்தியக் கவிஞர் ரவீந்திரநாத் தாகூர் பெயர் இஸ்ரேல் நாட்டில் ஒரு தெருவுக்குச் சூட்டி அந்நாட்டு அரசு கவுரவித்துள்ளது.

உலகப் புகழ் பெற்ற இந்திய கவிஞரான ரவீந்திரநாத் தாகூர் மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்தவர் ஆவார்.  இவருடைய 159 ஆம் பிறந்த நாள் விழா கடந்த 7 ஆம் தேதி கொண்டாடப்பட்டது.  தாகூர் எழுதிய பாடல் இந்தியா, வங்கதேசம் ஆகிய இரு நாடுகளில்  தேசிய கீதமாக இசைக்கப்படுகிறது.

கடந்த 1913 ஆம் ஆண்டில் ரவீந்திரநாத் தாகூருக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.  அவ்வகையில் இந்தியாவில் முதல் முறையாக நோபல் பரிசு பெற்றவர் என்னும் பெருமையை ரவீந்திரநாத் தாகூர் அடைந்துள்ளார்.   உலகெங்கும் இவருடைய கவிதைகளுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

இவருடைய 159 ஆம் பிறந்த நாளை முன்னிட்டு இஸ்ரேல் நாட்டில் உள்ள டெல் அவிவ் நகரில் உள்ள ஒரு தெருவுக்கு ரவீந்திரநாத் தாகூர் பெயரைச் சூட்டு அந்நாட்டு அரசு கவுரவித்துள்ளது.   இந்த தகவலை டிவிட்டரில் வெளியிடப்பட்டு பலரும் தாகூருக்குப் புகழாரம் சூட்டி வருகின்றனர்.