ஜெருசலேம்

ஸ்ரேல் நாட்டில் வரும் மூன்றாம் தேதியன்று நடைபெறும் மக்களவை தேர்தல் ஒரு ஆண்டுக்குள் நடைபெறும் மூன்றாம் தேர்தல் ஆகும்.

பொதுவாக உலக நாடுகளில் ஐந்தாண்டுக்கு ஒரு முறை நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுவது வழக்கம்   ஒரு சில வேளைகளில் ஆட்சி கவிழ்ந்தால் இடையில் தேர்தல் நடக்கும்.  அவ்வாறு நடக்கும் தேர்தலில் வெற்றி பெறும் கட்சிகள் ஆட்சி அமைக்கும்.   ஆனால்  எந்த நாட்டிலும் இதுவரை அடிக்கடி தேர்தல் நடந்தது கிடையாது.

அந்த வரலாற்றை இஸ்ரேல் மாற்றி உள்ளது.  கடந்த வருடம் ஏப்ரல் மாதம்  9 ஆம் தேதி இஸ்ரேல் நாடாளுமன்றத்துக்கு தேர்தல் நடைபெற்றது.  இந்த தேர்தலில் அப்போதைய பிரதமரான பெஞ்சமின் நேதன்யாகுவின் லிக்குட் கட்சி மற்றும் முன்னாள் ராணுவ தளபதி பென்னி கான்ட்ஸின் புளூ அண்ட் ஒயிட் கட்சி இடையே கடும் போட்டி நிலவியது.  நெதன்யாகுவுக்கு அதிக இடங்கள் கிடைத்த போதிலும் பெரும்பான்மை இல்லாததால் ஆட்சி அமைக்க இயலவில்லை.

அதையொட்டி சென்ற வருடம் செப்டம்பர் மாதம் 17 ஆம் தேதி மீண்டும் ஒரு நாடாளுமன்றத் தேர்தல் நடந்தது.    அந்த முறையும் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.  அதையொட்டி புளூ அண்ட் ஒயிட் கட்சியுடன் இணைந்து அரசு அமைக்க பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு 28 நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டது.

நெதன்யாகுவால் அந்த 28 நாட்களில் பெரும்பான்மையைப் பெற இயலவில்லை.  ஆகையால் அந்நாட்டு நாடாளுமன்றத்துக்கு மூன்றாம் முறையாகத் தேர்தல் நடத்தும் மசோதா நிறைவேற்றப்பட்டது.  இந்த வருடம் மார்ச் மாதம் 3 ஆம் தேதி அதாவது நாளை தேர்தல் நடைபெற உள்ளது.   இவ்வகையில் இஸ்ரேல் நாட்டில் ஒரு ஆண்டு இடைவெளிக்குள் மும்முறை தேர்தல் நடக்கிறது.