ஜெருசலேம்: தற்போதைய இஸ்ரேல் நாட்டின் பிரதமர் பென்ஜமின் நேதன்யாகு மீது ஊழல், நம்பிக்கைத் துரோகம் மற்றும் மோசடி வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.

இதன்மூலம் அவரின் அரசியல் வாழ்க்கையே கேள்விக்குறியாகுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இஸ்ரேல் பிரதமராக பல்லாண்டுகளாக பதவி வகித்து வருபவர் நேதன்யகு. இவர் தீவிர யூத வலதுசாரி அரசியல்வாதியாவார்.

இவரின் பதவி காலத்தின்போது, இஸ்ரேல் தலைநகரம் டெல் அவிவிலிருந்து, ஜெருசலேமிற்கு மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது. தற்போது இவர்மீது பல்வேறு பெரிய குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இவர் தனது பணக்கார நண்பர்களிடமிருந்து லட்சக்கணக்கான பவுண்டுகள் மதிப்புள்ள ஆடம்பரப் பொருட்களைப் பரிசாக பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும், நாட்டின் ஊடகங்களில் தனக்கு சார்பாக செய்தி ஒளிபரப்ப செய்ததாகவும், அதன்பொருட்டு வர்த்தக உதவியையும் மேற்கொண்டதாகவும் குற்றம் சாட்டப்படுகிறது.

இந்தப் புகார்கள் குறித்து அவரிடம் விசாரணையும் நடத்தப்பட்டுள்ளது. ஆனால், தன்மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தையும் அவர் மறுத்துள்ளார். இஸ்ரேலியப் பிரதமர் ஒருவர் பதவியில் இருக்கையில், அவர்மீது இத்தகைய வழக்குகள் பதியப்படுவது இதுவே முதல்முறை.

ஆனாலும், இஸ்ரேலிய சட்டப்படி, பதவியில் இருக்கும் ஒரு பிரதமரை, அவ்வளவு எளிதாக அசைத்துப் பார்த்துவிட முடியாது என்பதே உண்மை. எனவே, இவரின் அரசியல் வாழ்வு உடனடியாக கேள்விக்குறியாக மாறாது என்றும் கூறப்படுகிறது.