ஸ்ரீஹரிகோட்டா: சந்திரயான் 3 திட்டத்தைச் செயல்படுத்த 75 கோடி நிதி வழங்குமாறு மத்திய அரசை இஸ்ரோ நாடியிருக்கிறது.

நிலவை ஆராய வேண்டி சந்திரயான் 2ஐ அனுப்பியது இஸ்ரோ.ஆனால் அதில் தொழில்நுட்ப கோளாறால் அந்த திட்டம் தோல்வி அடைந்தது.

தற்போது அந்த தவறுகளை  சரிசெய்து, மீண்டும் சந்திரயான்3 திட்டத்தை இஸ்ரோ செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்துக்காக, மத்திய அரசு, பட்ஜெட்டில் ரூ.666 கோடி நிதி ஒதுக்கியுள்ளது.

இந்நிலையில் சந்திரயான்-3 திட்டத்தைச் செயல்படுத்த கூடுதலாக 75 கோடி நிதி ஒதுக்குமாறு மத்திய அரசுக்கு இஸ்ரோ கோரிக்கை விடுத்துள்ளது. அந்த 75 கோடியில், 60 கோடி ரூபாய் விண்கல இயந்திரங்கள், உபகரணங்கள் வாங்க தேவை என்றும், மீதம் 15 கோடி ரூபாய் ஏனைய செலவுக்காக ஒதுக்குமாறு கோரப்பட்டுள்ளது.