2021ம் ஆண்டு விண்வெளிக்கு மனிதனை அனுப்புவோம் – இஸ்ரோ தலைவர்

2021ம் ஆண்டு விண்வெளிக்கு மனிதனை அனுப்புவோம் என இஸ்ரோ தலைவர் சிவன் கூறியுள்ளார்.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையமான இஸ்ரோ செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தி சாதனை புரிந்து வருகிறது. அதன்படி நேற்று பிஎஸ்எல்வி சி43 என்ற ராக்கெட் மூலம் அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 8 நாடுகளை சேர்ந்த செயற்கைக்கோள்களுடன் ஹெச்.ஒய்.எஸ்.ஐ.எஸ். என்ற செயற்கைக்கோளையும் சேர்ந்து இந்தியா விண்ணில் செலுத்தியது.

isro

இந்த செயற்கைக்கோள் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹர்கோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி அராய்ச்சி மையத்தில் இருந்து அனுப்பப்பட்டது. பூமியில் உள்ள வனப்பகுதிகளை துல்லியமாக கணிக்க்கும் வகையில் இந்த செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டன.

இதையடுத்து, இஸ்ரோ தலைவர் கே. சிவன் பேசியபோது, “ பி.எஸ்.எல்.வி. சி-43 ராக்கெட் வெற்றிகரமாக தீர்மானிக்கப்பட்ட சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. அதனுடன் விண்ணுக்கு அனுப்பப்பட்ட 30 செயற்கைக்கோள்களும் விண்ணில் நிலைநிறுத்தப்பட்டன. முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஹெச்.ஒய்.எஸ்.ஐ.எஸ். செயற்கைகோள் பூமியை துல்லியமாக ஆய்வு செய்ய உருவாக்கப்பட்டது. இதில் அதி நவீன கேமரா பொருத்தப்பட்டுள்ளதால் துல்லியமாக பூமியின் மேற்பரப்பை அடையாளம் காணமுடியும்.

இதனை தொடர்ந்து டிசம்பர் 5ம் தேதி பிரெஞ்சு கயானாவில் இருந்து அதிக எடை கொண்ட ஜிசார்-11 என்ற செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட உள்ளது. பொதுவாக ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் 4 டன் வரையிலான செயற்கைகோள்களை மட்டுமே செலுத்தும் திறன் கொண்டது. ஆனால் ஜிசாட்-11 5.86 டன் எடை கொண்டது. அதனால் இந்த செயற்கைகோளை இங்கிருந்து விண்ணில் அனுப்ப இயலாது என்பதால் பிரெஞ்சு கயானாவில் இருந்து ஏவப்படுகிறது.

அதனை தொடர்ந்து ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து 2021-ம் ஆண்டு டிசம்பர் மாதம் மனிதர்கள் செல்லும் விண்கலம் விண்ணில் செலுத்தப்பட உள்ளது என சிவன் கூறியுள்ளார்.