isro countdown

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம், ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து, ஒரு சாதனை நிகழ்வாக ஜூன் 22 அன்று 20 செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்த ஆயத்தமாகியுள்ளதுடன் அதற்கான 48 மணி நேர கவுண்ட்டவுன் இன்று காலை முதல் துவங்கிவிட்டது.

ISRO

இந்தியாவின் புவி கூர்நோக்கு விண்கலம் கார்டொசாட்-2 உட்பட 20 செயற்கைக்கோள்கள் அனைத்தும் பி.எஸ்.எல்.வி சீ34 உதவியுடன் ஜூன் 22-ம் தேதி காலை 9.26 மணிக்கு விண்வெளி மையத்தில் இரண்டாவது தொடக்க திண்டில் இருந்து விண்ணில் செலுத்தப்படும்.

isro countdown 3

“மிஷன் தயார்நிலை சரிபார்க்கும் குழு மற்றும் ஏவுகணை அங்கீகார வாரியம், ஜூன் 22, 2016  அன்று .எஸ்.எல்.வி C34 / Cartosat-2 தொடர் செயற்கைக்கோள் மிஷன் விண்ணில் செலுத்தும் நிகழ்ச்சிக்காக திங்கட்கிழமை, ஜூன் 20, 2016 அன்று 09.26 மணி கவுண்ட்டவுன் துவங்கியது என ஒரு மூத்த இஸ்ரோ அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


விண்வெளி நிறுவனம், கடந்த 2008 ஆம் ஆண்டு, ஒரே நேரத்தில் 10 செயற்கைகோள்கள் விண்ணில் ஏவியிருந்தது குறிப்பிடத்தக்கது.
பி.எஸ்.எல்.வி C34 ஒரே நேரத்தில் ( ஒரு லிப்ட்-ஆஃப் ) சுமார் 560 கிலோ எடையுள்ள 19 இணை-பயணிக்கும் செயற்கைக்கோள்களை ஒரு 505 கி.மீ. சூரியப் கோளப்பாதையில் (SSO) ஏவவுள்ளது.
பி.எஸ்.எல்.வி C34 விண்ணில் செலுத்தவுள்ள அனைத்து 20 செயற்கைக்கோள்கள் மொத்த எடை சுமார் 1,288 கிலோ என ஒரு  இஸ்ரோ குழு உறுப்பினர் கூறினார்.
இணை பயணிக்கும் செயற்கை கோள்களில்  அமெரிக்க, கனடா, ஜேர்மனி மற்றும் இந்தோனேஷியா ஆகிய செயற்கைக்கோள்கள் ஆகியவற்றுடன் இந்திய பல்கலைக்கழகங்களில் இருந்து இரண்டு கோள்களும் அடங்கும்.
isro 4
மைக்ரோ செயற்கைக்கோள்களில் இந்தோனேஷியாவின் லாபான்-A3, ஜெர்மனியின் பிரோஸ் (BIROS), அமெரிக்காவின் ஸ்கைசாட்9 SKYSAT), ஜென் 2-1 (GEN 2-1), ஜெர்மனியின் MVV ஆகியவை விண்ணில் ஏவத் தயார் நிலையில் உள்ளன.
isro 3