தகவல் தொடர்பு செயற்கைகோள் ஜிசாட்-31 வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது

பெங்களூரு:

தகவல் தொடர்புகளுக்காக ஜிசாட்-31 செயற்கை கோளை  இஸ்ரோ வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. ஏற்கனவே கடந்த ஜனவரி 24ந்தேதி கலாம் சாட் செயற்கை கோளுடன் பிஎஸ்எல்வி சி-44 விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்ட நிலையில், தற்போது ஜிசாட்-31 செயற்கை கோளையும் வெற்றிகரமாக விண்ணில் ஏவியது.

தகவல் தொடர்பு சேவைகளுக்கான ஜிசாட்-31 செயற்கைக்கோள் பிரெஞ்ச் கயானாவில் ஏரியான் – 5 ராக்கெட் மூலம் இன்று அதிகாலை 2.30 மணியளவில் விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது.

ஏற்கனவே தகவல் தொடர்பு பணிகளுக்கு செலுத்தப்பட்டிருந்த  இன்சாட் 4சிஆர் செயற்கை கோள் காலம்முடிவடைய இருப்பதால், அதற்கு பதிலாக ஜி-சாட் 31 தகவல்தொடர்பு செயற்கை கோள் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது.

இந்த செயற்கைக்கோள்  தகவல் தொடர்பு மற்றும் தொலைக்காட்சி சேவைகளை பெற உதவும். மேலும் நாட்டை சுற்றியுள்ள பெருங்கடல்கள் குறித்த தகவல்களையும் இது அளிக்கும்  என இஸ்ரோ தெரிவித்துஉள்ளது. இந்த செயற்கை கோளில் ஆயுட்காலம் 15 ஆண்டுகள்.

இந்து இந்தியாவின்  40-வது தகவல் தொடர்பு செயற்கைகோள் என்பது குறிப்பிடத்தக்கது.

கார்ட்டூன் கேலரி