இன்று கவுண்ட் டவுன் தொடக்கம்: நாளை விண்ணில் பாய்கிறது ஜிஎஸ்எல்வி-F09

ஸ்ரீஹரிக்கோட்டா,

தீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து தெற்காசிய செயற்கைக்கோளுடன் நாளை விண்ணில் பாய்கிறது ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட். இதற்கான கவுண்ட் டவுன் இன்று பிற்பகல் தொடங்குகிறது.

தெற்காசிய நாடுகளுக்கு சேவை அளிக்கும் வகையில் ஜிசாட்-9 செயற்கைக்கோளை இஸ்ரோ விஞ்ஞானிகள் தயாரித்துள்ளனர். இந்த செயற்கைகோள் சார்க் கூட்டமைப்பி நாடுகளில் பாகிஸ்தானைத் தவிர மற்ற 7 ஆசிய நாடுகளின் கூட்டுத் திட்டத்தின்படி இந்த செயற்கைக்கோள் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த செயற்கைகோள் மூலம் தெற்காசிய நாடுகளில் ஏற்படும் இயற்கைப் பேரிடர்கள் தொடர்பான தகவல்களை முன்கூட்டியே தெரிவிப்பதுடன், தொலைத்தொடர்பு சேவையையும் வழங்கும் இந்த செயற்கைக்கோள் ஜி.எஸ்.எல்.வி. எஃப்9 ராக்கெட் மூலம் நாளை விண்ணில் ஏவப்படுகிறது.

2 ஆயிரத்து 230 கிலோ எடைகொண்ட ஜிசாட்-9 செயற்கைக்கோள், தகவல் தொடர்புக்கு உதவும் 12 கே.யு. பாண்ட் கருவிகளைச் சுமந்து செல்கிறது. ராக்கெட்டின் எரிபொருள் நிரப்பும் பணி நிறைவடைந்தது.

அதைத்தொடர்ந்து  ராக் கெட் ஏவு தயாராகும், 28 மணி நேர கவுண்ட் டவுன் இன்று பிற்பகல் 12.57 மணிக்குத் தொடங்குகிறது.

ஸ்ரீஹரிக்கோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் 2வது ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து நாளை மாலை 4.57 மணிக்கு ஜி.எஸ்.எல்.வி. எஃப்9 ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட இருக்கிறது.