ஸ்ரீஹரிகோட்டா:

புவி கண்காணிப்பு செயற்கைக்கோளுடன், 9 வணிக ரீதியிலான செயற்கை கோளுடன்  பிஎஸ்எல்விசி48 ராக்கெட் இன்று மாலை வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ,  புவி கண்காணிப்பு மற்றும் ராணுவப் பாதுகாப்புக்கு உதவும் வகையில்  ரி சாட்-2பி ஆர்1 (RISAT – 2BR1) எந்ற செயற்கைக்கோளை  உருவாக்கியது. இந்த செயற்கைக் கோள் இன்று மாலை 3.25 மணி அளவில்  ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதிஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள முதல் ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி48 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்டது.

சுமார்  628 கிலோ எடைகொண்ட ரிசாட் 2பிஆர்1 செயற்கைக்கோளில் உள்ள நவீன ரேடார் மூலம் துல்லியமாக பூமியைப் படம்பிடிக்க முடியும் என்பதால் பாதுகாப்புத் துறைக்கு வலுசேர்ப்பதாக இருக்கும் என்றும், இதன் மூலம் கிடைக்கும் டேட்டாக்கள்,  வேளாண்மை, பேரிடர் மேலாண்மை போன்ற பயன்பாட்டிற்கும் உதவிகரமாக இருக்கும் என்று இஸ்ரோ தெரிவித்து உள்ளது.

இத்துடன் இத்தாலி, இஸ்ரேல், ஜப்பான் ஆகிய நாடுகளின் தலா ஒரு செயற்கைகோள்கள் என 10 செயற்கை கோள்கள் செலுத்தப்பட்டன.