இந்திய விமானப்படையின் பலத்தை மேலும் வலுப்படுத்தும் ஜிசாட் 7ஏ செயற்கை கோள்

ஸ்ரீஹரிகோட்டா:

ன்று பிற்பகல் விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்ட ஜிசாட் 7ஏ செயற்கை கோள், ராணுவ தகவல் தொழில்நுட்ப பணிக்காக அனுப்பப்பட்டு உள்ளது. இந்த செயற்கை கோள் மூலம் இந்திய விமானப்படையின் பலம் மேலும் வலுப்படுத்தப் பட்டுள்ளது.

இந்திய ராணுவப் பயன்பாட்டிற்கான ஜிசாட் 7ஏ (GSAT-7A)  தகவல்தொடர்பு செயற்கைக்கோளைத் தாங்கியபடி ஜிஎஸ்எல்வி எப்-11 (GSLV F-11) ராக்கெட் இன்று மாலை 4.10 மணிக்கு வெற்றிகரலமாக  விண்ணில் செலுத்தப்பட்டது.

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் இரண்டாவது ஏவுதளத்திலிருந்து ஏவப்பட்ட இந்த விண்கலம் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது.

8 ஆண்டுகள் வாழ்வாதாரம் கொண்டுள்ள இந்த ராக்கெட்டில், முழுவதும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட கிரையோஜெனிக் என்ஜின் பொருத்தப்பட்டு உள்ளது. அதிக எடைகொண்ட செயற்கைக்கோள்களை தாங்கிச் செல்லும் ஜிஎஸ்எல்வி ராக்கெட் இதுவரை 12 முறை ஏவப்பட்ட நிலையில், தற்போது  13வது முறையாக ஏவப்படுகிறது.

ஜிசாட் 7ஏ தகவல்தொடர்பு செயற்கைக்கோள் புவி சுற்றுவட்டப் பாதையில் நிலை நிறுத்தப்பட உள்ளது.  இந்த செயற்கை கோள்மூலம் ராணுவத்தினருக்கு கியூ-பேன்ட் தகவல் தொடர்பு கிடைக்கும் வகையில் செயற்கை கோள் உருவாக்கப்பட் டுள்ளது.

இதன் காரணமாக இந்திய விமானப்படை மேலும் பலம் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது. போரின்போது ஜெட் விமானம் பறந்துகொண்டிருக்கும் நிலையில்,  ஒருவருக்கொருவர் தொடர்புகொள்ளும் வகையில் தகவல் தொடர்பு வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளன.

மேலும்,, செயற்கைக்கோள் மூலம் பெறும் மற்றும் விமானத்திலிருந்து கொடுக்கப் படும்  சிக்னல்களின் திறனை அதிகரிக்கும் வகையிலும், சிக்னல்களை மற்றொரு  ஜெட் அல்லது விமான நிலையத்திற்கு அனுப்புவதன் எளிதில் தகவல் தொடர்பு கிடைக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்து உள்ளது.

இந்த செயற்கை கோளில் 70 சதவிகித பயன்பாடு இந்திய விமானப்படைக்கும், 30 சதவிகிதம் இந்திய ராணுவத்துக்கும் பயன்படும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது.