விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்ட சந்திராயன் 2: இஸ்ரோ விஞ்ஞானிகள் சாதனை

உலகில் முதன் முறையாக, நிலவின் தென் துருவ பகுதியை ஆய்வு செய்ய சந்திராயன் 2 என்கிற விண்கலத்தை, இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.

கடந்த, 2008ம் ஆண்டு, நிலவை ஆய்வு செய்ய, சந்திராயன் என்கிற விண்கலத்தை இஸ்ரோ அனுப்பியிருந்தது. அந்த விண்கலம், நிலவின் மேற்பரப்பில் தரையிறங்கி, தண்ணீர் இருப்பதற்கான அம்சங்களை ஆய்வு செய்தது. அந்த விண்கலத்தின் ஆயுட் காலம் கடந்த 2009ம் ஆண்டு முடிவடைந்த நிலையில், நிலவில் அடுத்தக்கட்ட ஆய்வுகளை மேற்கொள்ளும் திட்டங்களை கடந்த சில ஆண்டுகளாக இஸ்ரோ மேற்கொண்டு வந்தது.

இந்நிலையில், தற்போது சந்திராயன் 2 என்கிற விண்கலத்தை, உருவாக்கியுள்ள இஸ்ரோ, நிலவில் உள்ள கனிமவளங்கம், மக்கள் வாழ சாதகமான சூழல் உள்ள நிலை, தண்ணீர் இருப்பு போன்றவை குறித்து ஆய்வுகளை இதன் மூலம் மேற்கொள்ள உள்ளது. இதற்காக இன்று அதிகாலை 2:51க்கு ஆந்திரா மாநிலம், ஸ்ரீஹரிகோட்டா, சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள ஏவுதளத்தில் இருந்து ஜி.எஸ்.எல்.வி., மாக் 3 – எம் 1 ராக்கெட் மூலமாக இந்த ஏவுகனை விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது.

சந்திராயன் 2 விண்ணிற்கு சென்றதும், முதலில் புவி வட்ட பாதையில் வலம் வரும். பின்னர், நிலவின் சுற்றுப்பாதைக்கு தன்னை அது மாற்றிக்கொள்ளும். இறுதியாக செப்டம்பர் 6ம் தேதி, நிலவின் தென் துருவ பகுதியில் சந்திராயன் தரையிறங்கி, தனது ஆய்வு பணிகளை துவக்கும். நிலவை சுற்றி ஆய்வு செய்வதற்காக ஆர்பிட்டர் என்ற சாதனமும், நிலவில் தரையிறங்கி ஆய்வு செய்ய லேண்டர் விக்ரம் என்ற சாதனம், நிலவின் தரையில் ஊர்ந்து சென்று ஆய்வு செய்ய ரோவர் என்ற சாதனம் என 3 சாதனங்கள் சந்திராயன் 2ல் இடம் பெற்றுள்ளன. இம்மூன்று சாதனங்களிலும் அதிநவீன கேமராக்கள், எக்ஸ்ரே கருவிகள், வெப்பநிலையை ஆய்வு செய்யும் கருவிகள், லேசர் தொழில்நுட்பத்தில் செயல்படும் கருவிகள் என 13 வகையான கருவிகள் இணைக்கப்பட்டுள்ளன.

முன்னதாக கடந்த 15ம் தேதி செலுத்தப்படுவதாக இருந்த சந்திராயன் 2, தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஏவப்படாமல், நிறுத்தப்பட்டிருந்தது. இத்தகைய சூழலில், தற்போது வெற்றிகரமாக விண்ணில் ஏவுகனை ஏவப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் பல்வேறு விஞ்ஞானிகள், ஜக்கி வாசூதேவ் உட்பட பலர் கலந்துக்கொண்டனர்.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Andhra Pradesh, Chandrayaan-2, india, ISRO, Moon, Second Space Mission, Sriharikota
-=-