பிரெஞ்ச் கயானாவில் இருந்து ஏவப்பட இருந்த செயற்கைகோள் திட்டம் ஒத்திவைப்பு : இஸ்ரோ தகவல்

டில்லி :

மீபத்தில் விண்ணுக்கு செலுத்தப்பட்ட ஜிசாட் 6ஏ  செயற்கைகோள் தகவல் துண்டிக்கப்பட்ட நிலையில், அடுத்த மாதம் பிரெஞ்ச் கயானாவில் இருந்து மேலும் ஜிசாட் உள்பட 11 செயற்கை கோள்கள் ஏவ திட்டமிடப்பட்டிருந்தது.

தற்போது, இந்த திட்டத்தை இஸ்ரோ ஒத்தி வைத்துள்ளதாக அறிவித்துள்ளது.

கடந்த மாதம் 20ந்தேதி சதீஸ்தவான் வின்வெளி நிலையத்திலிருந்து  ‘ஜிசாட்- 6 ஏ’ செயற்கைக்கோள் , ஜி.எஸ்.எல்.வி. எப்.8 ராக்கெட் வாயிலாக இஸ்ரோ விண்ணில் செலுத்தியது.  ஆனால் அந்த ராக்கெட்டை விண்ணில் வெற்றிகரமாக  நிலை நிறுத்தப்பட்ட நிலையில், அந்த செயற்கை கோளில் இருந்து திடீரென தகவல் துண்டிக்கப்பட்டது. அதை மீட்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில்,  இஸ்ரோ சார்பில் தகவல் தொடர்புக்கான ஜிசாட் – 11 நவீன செயற்கைகோள் தயாரிக்கப்பட்டது .இது அதிக எடை கொண்டது. அந்த செயற்கைகோளை அடுத்த மாதம்(மே) பிரெஞ்ச் கயானாவில் இருந்து விண்ணில் செலுத்த முடிவு செய்யப்பட்டது. அத்துடன் ஐரோப்பிய செயற்கைகோள் ராக்கெட் ஏரியன் – 5 போன்ற 11 செயற்கை கோள்கள்  மே மாதம் 25ம் தேதி விண்ணில் ஏவ முடிவு செய்யப்பட்டு இருந்தது.

தற்போது  இந்த செயற்கைகோள்களை  விண்ணில் ஏவுவதை இஸ்ரோ ஒத்தி வைத்துள்ளது.

இதுகுறித்து இஸ்ரோ வெளியிட்டுள்ள அறிக்கையில், தொழில்நுட்ப ரீதியிலான சோதனைகள் நடத்த வேண்டி இருப்பதால் பிரெஞ்ச் கயானாவில் இருந்து விண்ணில் செலுத்தப்பட இருந்த திட்டம் ஒத்திவைக்கப்பட்டு உள்ளது என்று கூறி உள்ளது.

மேலும்,. அந்த செயற்கைகோளை விண்ணில் ஏவுவதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.