லக்னோ:

.பி.யில் 6ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகா கும்பமேளா தற்போது நடைபெற்று வருகிறது. இதையொட்டி திரிவேணி சங்கமத்தில் கோடிகண்கானோர் நீராடி வருகின்றனர்.

இதுகுறித்த புகைப்படைகளை சமீபத்தில் இஸ்ரோ விண்ணுக்கு அனுப்பிய காட்டோசாட்  விண்கலம் படம் எடுத்து அனுப்பி உள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் (அலகாபாத்) கங்கை-யமுனை-சரஸ்வதி ஆகிய முப்பெரும் நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் கும்பமேளா நடைபெற்று வருகிறது. மூன்று நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடுவது புண்ணியம் என்று கருதப்படுகிறது.

உலகம் முழுவதும் இருந்து பல லட்சம் பக்தர்கள் இங்கு வந்து  திருவிழாவில் பங்கேற்று புண்ணிய நதிகளில் நீராடி வழிபாடு செய்து வருகின்றனர்.

ஜனவரி 15ஆம் தேதி தொடங்கிய கும்பமேளா மார்ச் 4ந்தேதி வரை நடைபெற உள்ளது. இதற்காக பல தரப்பபட்ட பாதுகாப்பு மற்றும் தங்கும் வசதிகள், மருத்துவ வசதிகள்  உள்பட அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், சமீபத்தில் இஸ்ரோ சார்பில் விண்ணுக்கு வெற்றிகரமாக அனுப்பப்பட்ட கார்டோசாட் செயற்கைகோள்,  கும்பமேளாவின் காட்சிகளை 500 கிலோமீட்டர் உயரத்தில் இருந்து  படம் எடுத்து அனுப்பியுள்ளது. அந்த படத்தை இஸ்ரோ வெளியிட்டு உள்ளது.