டெல்லி:

ஒரே நேரத்தில் 400 செயற்கை கோள்களை விண்ணில் செலுத்தும் தொழில்நுட்ப திறன் இஸ்ரோ வசம் உள்ளது என்று அந்நிறுவன முன்னாள் தலைவர் மாதவர் நாயர் கூறினார்.

முன்னாள் இஸ்ரோ தலைவர் மாதவன் நாயர் பிடிஐ செய்திநிறுவனத்திடம் கூறுகையில்,‘‘ 104 ராக்கெட்களை ஒரே நேரத்தில் விண்ணில் செலுத்தியன் மூலம் இஸ்ரோ தொழில்நுட்ப சாதனையை நிரூபித்துள்ளது. மேலும், அந்த ராக்கெட் 400 நானோ செயற்கைகோள்களை சுமந்து செல்லும் திறன் கொண்டதாகும். முதலில் 10 செயற்கைகோள்கள், பின்னர் 18, 35 என்று அதிகரி க்கப்பட்டு தற்போது 100ஐ எட்டியுள்ளது. 3 முதல் 4 கிலோ எடையுள்ள செயற்கைகோள்களை தயாரித்தால் 300 முதல் 400 செயற்கைகோள்களை ஒரே நேரத்தில் விண்ணில் செலுத்த முடியும்’’ என்றார்.

மேலும்,‘‘ 104 செயற்கைகோள்களும் புதிய தொழில்நுட்பம் மூலம் செலுத்தப்படவில்லை. ஏற்கனவே பயன்படுத்தப்பட்டு வரும் தெ £ழில்நுட்ப திறன் தான் தற்போது நிரூபிக்கப்பட்டுள்ளது. நம் நாட்டின் கோர்டோஸாட் செயற்கைகோள் தான் பிரதானமான ஏவப்பட்டது. மீதமுள்ள கால இடத்தில் தான் இதர 103 செயற்கைகோள்களும் பயணித்தன’’ என தெரிவித்தார்.

‘‘இந்த 103 செயற்கைகோள்களும் ஒன்று முதல் 2 ஆண்டுகள் வரை மட்டுமே பயன்பாட்டில் இருக்கும். அதன் பிறகு இவை விண்ணில் கழிவுகளாக மாறிவிடும் என்பது தான் ஒரு வருத்தமான செய்தி. இவை அனைத்தும் சிறிய ரக செயற்கைகோள்கள். எதிர்காலத்தில் இவற்றை கண்டுபிடிப்பது எளிதான காரியமல்ல. ’’ என மாதவர் நாயர் தெரிவித்தார்.

கார்டோசாட் செயற்கைகோளின் எடை மட்டும் 714 கிலோவாகும். இதர 103 செயற்கைகோள்களின் மொத்த எடை 664 கிலோ என்பது குறிப்பிடத்தக்கது.