நாளை மறுதினம் ஜிசாட்-31 செயற்கை கோளை விண்ணில் ஏவுகிறது இஸ்ரோ

பெங்களூரு:

ந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ, நாளை மறுதினம் (6ந்தேதி) மீண்டும் ஒரு புதிய செயற்கை கோளை விண்ணில் ஏவுகிறது. ஏற்கனவே கடந்த ஜனவரி 24ந்தேதி கலாம் சாட் செயற்கை கோளுடன் பிஎஸ்எல்வி சி-44 விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்ட நிலையில், தற்போது ஜிசாட்-31 செயற்கை கோளை ஏவுகிறது.

விண்வெளி தொழில்நுட்பத்தில் பல்வேறு சாதனைகளை படைத்து வரும் இஸ்ரோ, இந்த ஆண்டு சந்திரயான்-2 உள்பட 32 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டு உள்ளது. மேலும், விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பவும் திட்டமிட்டு உள்ளது.

இந்த நிலையில், 40-வது தகவல் தொடர்பு செயற்கைகோளான ஜிசாட்-31 செயற்கைகோளை அரினா-5 விண்கலம் மூலம், ஃபிரெஞ்ச் கயானாவிலிருந்து வரும் 6ம் தேதி விண்ணில் ஏவ முடிவெடுத்துள்ளது.

தற்போது, அதற்கான இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில்,விரைவில் கவுன்டவுன் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இஸ்ரோ தயாரித்துள்ள ஜிசாட்-31 அதிநவீன செயற்கைகோள்,. 2 ஆயிரத்து 535 கிலோ எடை கொண்ட து.

இந்த செயற்கைகோள்  டிடிஹெச் சேவை, டிவி ஒளிபரப்பு போன்றவற்றிக்கும் பயன்படும் வகையில், செயற்கைகோள் பயன்படும் அடுத்த 15 ஆண்டுகளுக்கு விண்ணில் பயணித்து இந்தியாவின் மையப்பகுதியும், தீவுப்பகுதியும் கண்காணிக்கும் என்றும் இஸ்ரோ தெரிவித்து உள்ளது.

கார்ட்டூன் கேலரி